புதிய ஜனாதிபதிக்கு கிழக்கு மாகாண சுதேச மருத்துவ தொழிலாளர்கள் சங்கம் வாழ்த்து!



அபு அலா-
னாதிபதித் தேர்தலில் ஏகோபித்த மக்கள் அபிமானங்களை வென்று, பெரும்பான்மையான வாக்குகளைப் பெற்று இலங்கை ஜனநாயக சோசலிஷ குடியரசின் 09 வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமேதகு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவர்களுக்கு கிழக்கு மாகாண சுதேச மருத்துவ தொழிலாளர்கள் சங்கம் வாழ்த்துகளை தெரிவித்துள்ளது.

அந்த வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, எமது நாடு பொருளாதார நெருக்கடியான சூழ் நிலையில் பல சவாலான இக்கால கட்டத்தில் அரச ஊழியர்களும், பொதுமக்களும் தங்களுக்கு வழங்கிய ஆணை மூலம் 9 வது ஜனாதிபதியாக நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டமையானது சகல இன மக்களின் பாரிய எதிர்பார்ப்பாகும்.

தங்கள் மீது கொண்ட முழுமையான நம்பிக்கையை நிலைநாட்டவும், நாட்டின் சவால்களை வெற்றிகொண்டு சிறந்த இலக்கினையும் அடைவீர்கள் என்ற நம்பிக்கையிலேயே ஆகும்.
இந்த எதிர்பார்ப்பையும், நம்பிக்கையையும் வெற்றிகொள்ள உங்களின் பயணம் வெற்றிகரமாக அமையவேண்டும். அதற்கு எல்லோருக்கும் பொதுவான இறைவனின் ஆசியும், அருளும் கிடைக்க வேண்டும்.

குறிப்பாக, அரச ஊழியர்கள் கடந்த காலங்களில் எதிர்நோக்கி வந்த பொருளாதார ரீதியான சிக்கல்கள் உள்ளிட்ட அரசியல் பழிவாங்கள்கள், பதவியுயர்வு, அவர்களுக்கு முறையாக கிடைக்க வேண்டிய கொடுப்பனவுகள் போன்ற பல்வேறுபட்ட பிரச்சினைகளையும் தாங்கள் அறிவீர்கள்.

அதற்கமைவாக, அவர்களுக்கு சிறந்தொரு தீர்வினையும் பெற்றுக்கொடுப்பதுடன் தங்கள் மீது முழுமையான நம்பிக்கை வைத்து வாக்களித்த அரச ஊழியர்கள் அனைவருக்கும் மனப்பூர்வமான நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என கிழக்கு மாகாண சுதேச மருத்துவ தொழிலாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஏ.ஆர்.எம்.றிம்ஸான் அந்த வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :