யானைச் சின்னத்தில் போட்டியிட தயாராகும் ரணில்!



பொதுத் தேர்தலில் யானைச்சின்னத்தில் போட்டியிடத் தயாராக இருக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கட்சியின் நிர்வாகக் குழுவுக்கு நேற்று (22) அறிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை அறிவித்த பின்னர், ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின் நிர்வாகக் குழுவின் அவசரக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தார், அங்கு இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

நாடளாவிய ரீதியில் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் வேட்புமனுக்களை தயாரிப்பதற்கு புதிதாக ஐந்து பேரை உள்வாங்குமாறும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பணிப்புரை விடுத்துள்ளார்.

இக்கலந்துரையாடலில் ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் குறித்தும் அலசப்பட்டதுடன், யானை சின்னத்துடன் தோன்றாமை தேர்தல் வெற்றிக்கு தடையாக இருப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :