பறகஹதெனியா அஸ்ஸலபிய்யா கலாபீடத்தில் வாசிகசாலைக்கான புத்தக அன்பளிப்பு மற்றும் மரநடுகை நிகழ்வு



பாறுக் ஷிஹான்-
லபிய்யா கலாபீடத்தின் 2014ம் ஆண்டு பட்டம்பெற்று வெளியாகிய பழைய மாணவர்களால் கல்லூரி வாசிகசாலைக்கு ஒரு தொகுதி புத்தக அன்பளிப்பும் மற்றும் மரநடுகை செயற்பாடும் இன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கல்லூரியின் செயலாளர் ஏ.எல்.கலீலுர் ரஹ்மான் உப அதிபர் எஸ்.யு ஸமீன் கலாபீட விரிவுரையாளர்கள் நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் கலாபீட மாணவர்கள் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வானது லுஹர் தொழுகையைத் தொடர்ந்து ஆரம்பிக்கப்பட்டதுடன் வாசிப்பின் அவசியம் மற்றும் மாணவர்களின் ஆளுமையாக்கத்தில் அதன் செல்வாக்கு குறித்த பல்வேறு அம்சங்கள் மாணவர்களுடன் கலந்துரையாடப்பட்டன.அத்தோடு இந்நாட்டிற்கும் முஸ்லிம் சமூகத்திற்கும் பங்களிக்கும் வகையில் கலாபீடத்திற்கான ஆய்வு மையம் நிறுவப்படுவதின் தேவை குறித்து பேசப்பட்டதுடன் அதற்கான கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.

தொடர்ந்து புத்தக அன்பளிப்ப நிகழ்வு இடம்பெற்றது. இதில் முந்நூறுக்கும் (300) மேற்பட்ட புத்தக்கங்கள் அன்பளிப்பு செய்யப்பட்டன. கலாபீட வாசிகசாலைக்கு தேவையான புத்தகங்களை பெற்றுக்கொடுப்பதற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்வதற்கான ஆதரவு கலாபீடத்திற்கு தொடர்ந்தும் கிடைக்கப்பெறும் எனும் கருத்தும் முன்வைக்கப்பட்டது.

இந்நிகழ்வைத் தொடர்ந்து கல்லூரி வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மர நடுகை நிகழ்வு இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :