முஸ்லிம் மக்களிடமிருந்த பிரதான பிரச்சினைக்கு நான் தீர்வை பெற்றுக்கொடுத்தேன்.- சாய்ந்தமருதில் ஜனாதிபதி ரணில்



ரணித்த முஸ்லிம்களின் உடல்களை நல்லடக்கம் செய்யும் விடயத்தில் அவர்களிடமிருந்த கவலையைப் போக்கி, நல்லடக்கம் செய்யும் பொருட்டு சட்டத்தின்மூலம் உரிமையைப் பெற்றுக்கொடுத்து, அவர்களிடமிருந்த பிரதான பிரச்சினைக்கு நான் தீர்வை பெற்றுக்கொடுத்தேன். என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் கலந்து கொண்ட "இயலும் ஸ்ரீலங்கா"மாபெரும் மக்கள் பேரணி சாய்ந்தமருது பௌசி மைதானத்தில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் கலாநிதி ஏ.எம்.ஜெமீல் தலைமையில் 2024.09.11 ஆம் திகதி இடம்பெற்றது. இந்நிகழ்விலேயே மேற்படி கருத்துக்களைத் தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி,

இவ்வாறான விடயங்களை அடுத்தவர்கள் பேசுவது தேர்தல் காலத்தில் தான். நான் இவைகளை தீர்த்து விட்டே உங்கள் முன் பேசிக்கொண்டிருக்கின்றேன் என்றும் தெரிவித்தார்.

நாட்டில் இப்போது இனவாதம் மதவாதம் இல்லை. முஸ்லிம் மக்கள் வர்த்தகம் செய்கின்றனர் அத்துடன் விவசாயத்திலும் ஈடுபடுகின்றனர் இவை இரண்டும் இல்லாமல் போனால்தான் பிரச்சினை மதம் தொடர்பான பிரச்சினைகள் எதுவும் இல்லை என்றும் யாருக்கு வர்த்தகத்தினையும் விவசாயத்தையும் அபிவிருத்தி செய்ய முடியும் என்று முஸ்லிம் காங்கிரஸிடம் கேளுங்கள் அவைகளை கேட்டுவிட்டு வாக்களியுங்கள் என்றும் தெரிவித்தார்.

நீங்கள் உணவின்றி இருந்தபோது நாங்கள் உணவு வழங்கினோம், அதுபோல் மருந்துக்கு தட்டுப்பாடு வந்தபோதும் எரிபொருள் தட்டுப்பாடு வந்தபோதும் கேஸுக்காக நீங்கள் போளினில் நின்றபோதும் நாங்கள் அதனைக்கொண்டு வந்து தந்தோம். அதேபோன்று விவசாயிகள் உரத்துக்காக தவித்தபோது அதனையும் கொண்டு வந்து தந்தோம். எதிர்பார்ப்புகளுடன் இருந்த சந்தர்ப்பத்தில் அவற்றை நிறைவேற்றினோம் என்றும் தெரிவித்தார்.

மக்கள் பட்டினியால் வாடியபோது நான் கவலைப்பட்டேன். நாட்டுமக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்தபோது நான் கவலையடைந்தேன். வேறு எவரும் இந்த நாட்டை பொறுப்பேற்க முன்வராதபோது ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச என்னை அழைத்து ஒப்படைத்தார் அவர் சென்றதன் பின்னரே இந்த நாட்டை பாரமேற்றேன்.

மக்களின் இந்த துன்பத்தை ஏன் சஜித்தால் புரிந்து கொள்ள முடியாது போனது? அவரிடம் இந்த நாட்டை பாரமெடுக்குமாறு கேட்டபோது ஏன் முன்வரவில்லை? மக்களின் துன்பத்தின்போது அவர்களுக்கு உதவ முன்வராதவர்கள் இப்போது ஆட்சியைக் கேட்பதில் என்ன நியாயம் இருக்கிறது? என்றும் கேள்வியெழுப்பினார்.

இப்போது உரத்தின் விலைகளை குறைக்கின்றார்களாம், விவசாயிகளின் கடன்களை குறைக்கின்றார்களாம், விவசாயிகளுக்கு உரம் தேவைப்பட்டபோது இவர்கள் வழங்க முன்வரவில்லை. இப்போது அனைத்தையும் தருவதாக கூறுகிறார்கள்.

கஷ்ட்டமான நிலையில் இருந்த நாட்டை கையேற்றுக் கொண்டு IMF மிடம் சென்றேன். உலகத்தலைவர்களுடன் பேசினேன் அவர்கள் கடன்களை பெற்றுக்கொள்ள வேண்டாம் என்று கூறினார்கள். ஆனால் நான் தேசிய உற்பத்தியில் 5% த்தை பெற்றுக்கொள்வதாக கூறினேன் மிகக் கஷ்ட்டத்துடனேயே வேலைகளை ஆரம்பித்தேன்.

IMF என்னிடம் கூறியது பணத்தை அச்சிட வேண்டாம் அது இன்னும் ரூபாயை வலுவிழக்க வைக்கும் என்றும் வங்கிகளிடம் கடன்களை பெறவேண்டாம் என்றும் கூறினார்கள் அதற்கும் நான் இணங்கினேன்.

மிக இறுக்கமான சந்தர்ப்பத்திலேயே Vat வரியை அதிகரிக்கவேண்டி ஏற்பட்டது. இப்போது நமத வருமானம் அதிகரித்துள்ளது. ரூபாயின் மதிப்பு அதிகரித்துள்ளது. டொலரின் பொறுமதியும் குறைந்துள்ளது. பொருட்களின் விலைகளும் குறைந்துள்ளன. நாங்கள் மக்களுக்கு அதிகரித்த அஸ்வசுமவை வழங்கினோம். உதய செனவரத்ன குழுவின் அறிக்கையின் கீழ் அடுத்த வருடம் அரச ஊழியர்களுக்கு சம்பளத்தை அதிகரிக்கவுள்ளோம். மூடப்பட்டிருந்த வர்த்தக நிலையங்களை திறப்பதற்க்கு நடவடிக்கை எடுத்தேன் என்றும் தெரிவித்தார்.

நாங்கள் பொருளாதார முறையை உறுதிப்படுத்த முனைய வேண்டும். தொடர்ந்து கடன்களைப் பெற முடியாது. ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும். புதிதாக சிந்தித்து முன்னேறும் வழிகளை தேடவேண்டும் என்றும் தெரிவித்தார்.

வாழ்க்கைச்செலவு அதிகம் என கூறுகிறார்கள் அப்படியானால் நாட்டை பாரமெடுத்து இவைகளை குறைக்க அனுராவும் சஜித்தும் ஏன் முன்வரவில்லை. அவர்கள் ஓடிவிட்டார்கள் நான் பரமெடுத்தேன் நான் பாரமெடுத்த நாட்டை கொண்டு செல்கின்றேன்.

விவசாயத்தை நவீன மயப்படுத்தவுள்ளேன் உல்லாசப்பயணிகளின் வருகையை அதிகரித்துள்ளோம். பருத்தித்துறை தொடக்கம் பாணமை வரை விஷேட உல்லாசத்துறை வலயமாக மாற்றுவோம். அம்பாறை சம்மாந்துறை உள்ளடங்கியதாக வர்த்தக முதலீட்டு வலயங்களை உருவாக்கவுள்ளோம் என்றும் தெரிவித்தார்.

நிகழ்வின்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் ஏ.எம். றியாஸ் (BESTOR) விஷேட நினைவு பரிசை கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்ற அதேவேளை ஜனாதிபதிக்கு பொன்னாடை நினைவுச் சின்னங்கள் வழங்கும் நிகழ்வுகளும் இடம் பெற்றன.

நிகழ்வில் அமைச்சர் அலி சப்ரி, பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.எல்.எம். அதாவுல்லா, முஷாரப் மற்றும் முன்னாள் ஆளுநர் ஆஷாத் சாலி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தயா கமகே உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.































இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :