வளமான நாட்டை கட்டியெழுப்ப ஒன்றிணையுமாறு அறைகூவல் விடுத்தார் சுயச்சை வேட்பாளர் ரொஷான் ரணசிங்க



ழல் நிறைந்த அரசியல் வாதிகளால் நாடு வீழ்ச்சியடைந்து பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கித்தவிக்கும் இந்த வேளையில் நாங்கள் ஜனாதிபதி தேர்தல் ஒன்றுக்கு முகம்கொடுத்துள்ளோம். தற்போதைய தேர்தலிலும்கூட நாட்டை கொள்ளையிட்டவர்களும் சட்டம் ஒழுங்குக்கு தீங்கு இழைத்தவர்களும் உழைப்பு என்றால் என்னவென்று தெரியாதவர்களுமே எங்கள் முன் ஆணைகேட்டு வந்துள்ளனர். இவர்கள் விடயத்தில் மக்கள் சிந்தித்து செயற்பட வேண்டும் என்று ஜனாதிபதி சுயச்சை வேட்பாளர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தின் ஒலுவில் பிரதேசத்திலுள்ள ஒசாக்க விடுதியில் சமூக செயற்பாட்டாளர் மஹ்ரூப் தலைமையில் 2024.09.05 ஆம் திகதி இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்படி கருத்துக்களை தெரிவித்தார்.

வளமான நமது நாடு, தொழில் தேர்ச்சியற்ற அரசியல் வாதிகளால் சிதைக்கப்பட்டுள்ளதாகவும் இனவாத மற்றும் மதவாத போக்குகளும் இவ்வாறான வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்ததாகவும் சிங்கப்பூரின் வளர்ச்சிக்கு அங்கு இனவாதமற்ற போக்கே காரணம் என்றும் தெரிவித்தார்.

நாட்டின் தலைவர் ஊழல் மிக்கவராக இருக்கின்றபோது கீழ்மட்ட ஊழலை ஒருபோதும் நிறுத்த முடியாது என்றும் தெரிவித்தார்.

நாட்டில் வளங்கள் நிறைந்து கிடக்கும்போது குன்டூசிமுதல் அத்தனையையும் இறக்குமதி செய்கின்றோம். இவ்வாறான நிலை மாறவேண்டும். எங்களது நாட்டை நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து கட்டியெழுப்ப முன்வருமாறு அறைகூவல் விடுத்தார்.

1983 கறுப்பு ஜூலையை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். அப்போதிருந்தே நாடு வீழ்ச்சியை நோக்கிச்செல்ல ஆரம்பித்து விட்டது. மக்களால் உருவாக்கப்படும் மக்கள் பிரதிநிதிகள் பொருளாதாரத்தில் உயர்ந்து செல்கின்றனர் ஆனால் நாடும் மக்களும் ஏழ்மை நிலைக்கு செல்கின்றது.

சாதாரண குடும்பத்தில் பிறந்த நான், உழைப்பின் காரணமாக முன்னிலைக்கு வந்தேன். அவ்வாறான நிலைக்கு ஒவ்வொருவரும் வரவேண்டும். நாடு தானாகவே முன்னேறும் என்றும் தெரிவித்தார்.

வளமான நாட்டை உருவாக்கப்போவதாக கூறும் சிலரிடம் நமது நாடு தப்பித்தவறி சென்றுவிட்டால் அவர்களால் ஒருவருடத்துக்கேனும் நாட்டை கொண்டுசெல்ல முடியாது போகும் என்றும் தெரிவித்தார்.

இறக்குமதிகளை குறைத்து உள்ளூர் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்றும் பயிரிடக்கூடிய 24 இலட்சம் ஏக்கர் காணிகள் இருப்பதாகவும் அவைகளை மக்களுக்கு பகிர்ந்தளித்து உள்ளூர் உற்பத்தியை அதிகரிக்க முடியும் என்றும் தெரிவித்தார்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :