முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்கவுக்கு ஆதரவு ...!



எம்.என்.எம்.அப்ராஸ்-
திர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தி ஜானாதிபதி வேட்ப்பாளர் அநுரகுமார திசாநாயக்கவுக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளேன் என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும்,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர் பீட உறுப்பினரும், அங்கட்சியின் தேசிய இளைஞர் அமைப்பாளரான சிரேஷ்ட சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் தெரிவித்தார்.

கல்முனையில் கடந்த வெளளிக்கிழமை (06) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் தான் வகித்த தேசிய இளைஞர் அமைப்பாளர் பதவி உயர் பீட உறுப்பினர் என்பவற்றின் இராஜினாமா செய்வதாக கட்சியின் தலைவருக்கும்,செயலாளருக்கு அறிவித்ததாக இதன் போது முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சிரேஸ்ட சட்டத்தரணி ஆரீப் சம்சுதீன் தெரிவித்தார். மேலும்2015ஆம் ஆண்டு முதல் ஏறக்குறைய 10 வருடங்களாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினராக செயற்பட்ட நான் சென்ற இரு வருடங்களாக அக்கட்சியின் எந்தவொரு கூட்டங்களிலும் கலந்து கொள்ளவில்லை. இவ்வாறான அரசியல் சூழலில் ஏன் நான் தீடிரென அக்கட்சியிலிருந்து விலக வேண்டும் என நீங்கள் நினைக்கக் கூடும். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் கட்டமைப்பில் பாராளுமனற உறுப்பினர்களின் செயற்பாடுகள் தொடர்பில் கட்சி எடுக்கும் நடவடிக்கைகளில் அதிருப்தியடைந்த நிலையில் கட்சி செயற்பாடுகளில் சுமார் இரண்டு வருடங்கள் ஒதுங்கியிருந்தேன் ஆனால் இச் சமயத்தில் நான் அனுர குமார திஸநாயக்கவை ஆதரிக்கும் தீர்மானம் என்பது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உள்ளக குறைபாடுகளில் எவ்வித சம்பந்தமும்மில்லை.

இத்தேசம் சுதந்திரமடைந்து 75 வருடங்கள் கடந்து விட்டது. இந்த 7 தாசப்தத்திலும் இந்நாட்டை ஆட்சி செய்த ஆட்சியாளர்களினால் இந்நாடும்,மக்களும் நன்மைடையவில்லை. நன்மையடைந்தவர்கள் யார் என்பதை இந்நாடு அறியும்.இவ் அரசியல் கலாசாரம் மாற்றப்பட வேண்டும். ஆனால், இவ் இன்னுமே மாற்றங்கள் ஏற்படவில்லை. இந்நிலையில் எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள 9வது ஜனதிபதித் தேர்தல் ஒரு மாற்றத்துக்கான தேர்தலாக அமைய வேண்மேன்பது எனது ஆசை மட்டுமல்ல நீதியையும், நியாயத்தையும், சமத்துவத்தையும், சம உரிமையையும் விரும்புகின்றவர்களின் அவாவும் அதுவாகவே இருக்கக் கூடும். அது மாத்திரமின்றி ஊழல்,மோசடி, அதிகாரத்துஷ்பிரயோகமற்ற ஆட்சியாளர்களினால் ஆளப்படுகின்ற ஒரு நாடாக இலங்கை மிளிர வேண்டும். அதற்கோர் புதிய சக்தி அவசியம். அச்சக்தி தேசிய மக்கள் சக்தியிடம் காணப்படுவதை நான் காண்கின்றேன். அத்தோடு, தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்கவின் தேர்தல் விஞ்ஞாபனத்திலுள்ள கோட்பாடுகளும் அதற்கான செயற்பாடுகளும் இந்நாட்டு மக்கள் எதிர்பார்க்கும் புதியதோர் அரசியல் கலாசாரத்தை உருவாக்கும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது. அந்த நம்பிக்கையின் அடிப்படையிலும் எந்தவொரு சலுகையும், எதிர்பார்புமின்றி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்கவை ஆதரிக்கத் தீர்மானித்துள்ளேன். தேசிய மக்கள் சக்தியை அவர்களின் கொள்கையின் அடிப்படையில் சுயாதீனமாக ஆதரிக்கின்றேன் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :