புதிய ஜனாதிபதி அநுரவுக்கு அம்பாறை மாவட்ட ஜம்இய்யதுல் உலமா வாழ்த்து



அஸ்லம் எஸ்.மெளலானா-
லங்கையின் 09 வது நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள அநுர குமார திசாநாயக்கவுக்கு அம்பாறை மாவட்ட ஜம்இய்யதுல் உலமா வாழ்த்துத் தெரிவித்துள்ளது.

அம்பாறை மாவட்ட ஜம்இய்யத்துல் உலமாவின் சார்பில் அதன் தலைவர்
ஐ.எல்.எம். ஹாஷிம் மெளலவி, செயலாளர் ஏ.எல். நாஸிர் கனி ஆகியோர் இணைந்து ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள அந்த வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது ;

எளில்மிகு இலங்கை மிக நீண்ட காலமாக ஜனநாயக நெறிமுறைகளைத் பின்பற்றி ஆட்சி செய்யப்படும் ஒரு நாடு. இந்நாட்டு குடி மக்கள் இத்தேர்தலில் ஜனநாயக பாரம்பரியங்களுக்கும் வழிமுறைகஞக்கும் உட்பட்டு சுயாதீனமான முறையில் தம் நாட்டுக்குத் தேவையான தகுதியான ஜனாதிபதியாக தங்களைத் தெரிவு செய்ததன் மூலம் தங்களுடைய தேர்தல் விஞ்ஞாபனத்தையும், தங்கள் கொள்கை வாக்குறுதிகளையும் அங்கிகரித்துள்ளனர்.

உங்கள் தலைமைத்துவத்தின் மீது அனைத்து இன, மத, பிரதேச மக்களும் வைத்துள்ள நம்பிக்கைக்கும், விசுவாசத்துக்கும் அமைவாக, இந்நாட்டில் சாந்தி, சமாதானம், சகோதரத்துவம், சௌஜன்னியம், அமைதி, செழிப்பு, பாதுகாப்பு முதலான முதல்தர விழுமியங்களைப் பேணி ஒளிமயமான சிறப்பானதொரு நல்லாட்சியை முன்கொண்டு செல்வீர்கள் என அம்பாறை மாவட்ட ஜம்இய்யத்துல் உலமா நம்பிக்கை வைத்துள்ளது.

மேலும், இந்நாட்டில் புரையோடிப் போயுள்ளன இன, மத, குல,மொழி, பிரதேச வேறுபாடுகள் நீங்கி அனைத்துப் பிரிவினரும் சந்தோசமாக வாழவும், நீதி, நியாயம், சமத்துவத்துடன் கூடிய தேசாபிமானம் மிக்கவர்களாகவும் வாழக் கூடிய எளில்மிகு சூழலைக் கட்டமைப்பீர்கள் என்ற நம்பிக்கை எமக்கிருக்கிறது.
ஆட்சி அதிகாரம் மிக்கவன் அல்லாஹ்தான். அவன் நாடியவருக்கு ஆட்சியைக் கொடுக்கிறான்; அவன் நாடியவர்களிடமிருந்து ஆட்சியைப் பறித்துக் கொள்கிறான். வல்லோன் அல்லாஹ் தனது அருளின் மூலமாக நமது தாய்நாட்டை சுபீட்சமும், ஒளிமயமும் நிறைந்த தேசமாக கட்டியெழுப்புவதற்குத் தேவையான பலத்தையும், திராணியையும் தங்களுக்குத் தந்தருளப் பிரார்த்திக்கின்றோம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :