நாட்டையும் கட்சியையும் பாதுகாக்கும்பொருட்டே சஜித்தை ஆதரிக்கும் முடிவுக்கு வந்தோம்.- றவூப் ஹக்கீம்.



ந்த தேர்தலானது ஜனாதிபதியை தீர்மானிக்கின்ற தேர்தல் மாத்திரம் அல்ல. எங்களது இயக்கத்தை பாதுகாத்து, அடுத்த கட்டத்துக்கு நகர்த்துவதற்கான ஒரு முக்கிய தேர்தலுமாகும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான றவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

வெல்லும் சஜித்தின் தேர்தல்கால நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக கல்முனை மாநகரசபையின் முன்னாள் முதல்வரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் சர்வதேச விவகாரங்களுக்கு பொறுப்பானவருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிபின் தலைமையில், செயலகம் ஒன்றை திறந்து வைக்கும் நிகழ்வு 2024.09.08 ஆம் திகதி சாய்ந்தமருதில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே றவூப் ஹக்கீம் மேற்கண்டவறு தெரிவித்தார்.

சஜித் பிரேமதாசவின் வெற்றியானது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற இயக்கத்தின் வெற்றியாகவும் பார்க்கப்படுகின்றது. கடந்த 1988 ஆம் ஆண்டு எங்களது மறைந்த தலைவர் எடுத்த காத்திரமான முடிவினால் சஜித்தின் தந்தையார் ஜனாதிபதியானார். அப்போது தலைவர் எதிர்க்கட்சியிலேயே இருந்தார். அப்போதும் கட்சி பலமானதாகவே இருந்தது.

நாங்கள் இப்போதும் எதிர்க்கட்சியில் இருக்கின்ற போதிலும் கட்சி பலமானதாகவே இருக்கின்றது.

கடந்த ஜனாதிபதி தேர்தலின்போதும் நாங்கள் வெற்றியடைந்தோம். எவ்வாறு என்றால் அப்போதைய தேர்தலில் கோட்டாபாய என்ற முஸ்லிம்களுக்கு எதிரான அலை மிக பாரதூரமாக இருந்தது. அந்த வேளையில் அம்பாறை தொகுதியில் கோட்டாவுக்கு 87000 வாக்குகளும் சஜித்துக்கு 27000 வாக்குகளும் கிடைத்து. கல்முனையில் சஜித்துக்கு 47000 கோட்டாவுக்கு 7000 சம்மாந்துறை தொகுதியில் சஜித்துக்கு 57000 கோட்டாவுக்கு 7000 பொத்துவில் தொகுதியில் சஜித்துக்கு 102000 கோட்டாவுக்கு 22000 அப்போதும் நாங்கள் வெற்றியடைதோம்.

அப்போது கோட்டா இனவாதத்தை பேசியே வெற்றியை தனதாக்கிக் கொண்டார். இப்போது இனவாதம் சிங்கள மக்களிடம் இல்லை அவர்கள் தெளிவாக இருக்கின்றனர். இந்த முறையும் நாங்கள் பெற்றதை விட அதிகமான வாக்குகளை பெறவே முயற்சித்துக் கொண்டிருக்கின்றோம் என்றும் தெரிவித்தார்.

நாங்கள் நாட்டின் பல்வேறு இடங்களுக்கு சென்று வருகின்றோம் அங்கெல்லாம் இனவாதம் பேசப்படவில்லை. அவர்களது எதிர்பார்ப்பெல்லாம் சிறந்த தலைவருடாக நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் என்பதே.

தற்போதைய ஜனாதிபதி தேர்தலில் நால்வர் களத்தில் இருக்கின்ற போதிலும் மூன்றாவது இடத்துக்காக ரணிலுக்கும் நாமலுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகின்றது. நாடு போகும் போக்கில் ரணில் நான்காவது இடத்துக்கு வந்தாலும் ஆச்சரியப்படுவதக்கில்லை என்றும் தெரிவித்தார்.

கட்சிக்குள்ளும் காசைக்கொடுத்து சிலரை வாங்க முயச்சித்தனர் இதில் மட்டக்களப்பில் அவர்களது சதிவலையில் சிலர் சிக்கிவிட்டனர்.

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் கட்சியை எவ்வாறு பாதுகாப்பது என்பதை இந்த தேர்தலில் கற்றுள்ளதாகவும் பொதுத்தேர்தலில் அனைத்தும் இலகுவாகிவிடும் என்றும் தெரிவித்தார்.

நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம். ஹரீஸ், பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம் மற்றும் கட்சியின் உயர் பீட உறுப்பினர்கள், பெரும் திரளான மக்களும் கலந்து கொண்டனர்.





















இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :