இலங்கை தேசிய பாதுகாப்பு சபை ஜனாதிபதி தலைமையில் கூடியது



தேசிய பாதுகாப்பு சபை இன்று (19) காலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் கூடியது.

எதிர்வரும் 2024 ஜனாதிபதித் தேர்தலை சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடத்துவதற்கு அவசியமான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வது தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டது.

நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுதல், வேட்பாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல், வாக்குச் சாவடிகள் மற்றும் வாக்கு எண்ணும் நிலையங்களை அண்டிய பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்துதல் மற்றும் தேர்தல் ஆணைக்குழுவுக்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்குதல் என்பன குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது.

அத்துடன், தேர்தலுக்குப் பின்னரான காலப்பகுதியில் மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு இடையூறு ஏற்படாத வகையில் நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாதுகாப்புத் தரப்புப் பிரதானிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :