ஒன்றிணைவோம் வாருங்கள்.சஜித் உள்ளிட் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு ரனில் அழைப்பு!



திர்வரும் தேர்தல்கள் மற்றும் அரசியல் சவால்களுக்கு தயாராகும் வகையில், ஐக்கிய தேசியக் கட்சி (UNP) அனைத்து எதிர்க்கட்சிகளுடனும் பொதுவான கூட்டணியை அமைக்க தீர்மானித்துள்ளது. கொழும்பு ப்லவர் வீதியிலுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் காரியாலயத்தில் நேற்று (23) இடம்பெற்ற தலைமைத்துவ சபைக் கூட்டத்தின் போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
“இந்த கூட்டணிக்கான பிரேரணை முன்னாள் ஜனாதிபதி விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, எதிர்காலத் தேர்தல் மற்றும் அரசியல் சூழ்நிலைகளை ஒன்றிணைந்து எதிர்கொள்ள உத்தேச கூட்டணியில் இணையுமாறு அனைத்து எதிர்க்கட்சிகள், சமகி ஜன பலவேகயா (SJB) உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்குமாறு அவர் கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :