வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் அமோக ஆதரவுடன் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி ஆவார் என்பது எனது பூரண நம்பிக்கை.
இவ்வாறு ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவின் அம்பாறை மாவட்ட தமிழ் பிரதேச இணைப்பாளரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான பேராசிரியர் முருகேசு ராஜேஸ்வரன் திருக்கோவில் கூட்டத்தில் பேசுகையில் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்..
எமது மாவட்டத்தில் உள்ள தமிழ் பிரதேசங்கள் பல காலமாக புறக்கணிக்கப்பட்டு வருகிறது. அதனை சீர் செய்து தருவார் என்ற நம்பிக்கை உள்ளது.
உண்மையில் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக தெரிவான பிறகு வரிசை யுகத்துக்கு முடிவுகட்டினார். பொருளாதாரத்தை மேம்படுத்த திட்டங்களை வகுத்தார். இன்று ரூபாவின் பெறுமதி வலுவடைந்து வருகிறது. பொருட்களின் விலைகளும் குறைந்துள்ளன. சுற்றுலாப்பயணிகளின் வருகையும் அதிகரித்துள்ளது. எமது அரச தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வும் வழங்கப்படவுள்ளது.
அவருக்கு நாம் அனைவரும் நன்றிகள் செலுத்த வேண்டும். அதற்கு ஒரேயொரு வழி நமது பொன்னான வாக்குகளை வீணாக்காமல் அவருக்கு அளிப்பதே.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்நாட்டை ஆளவேண்டியது கட்டாய தேவையாகும். இன்னும் ஐந்தாண்டுகளுக்கு அவரின் தலைமைத்துவம் இருந்தால் இந்நாடு நிச்சயம் முன்னேறும். சிலவேளை ரணில் விக்கிரமசிங்க தோற்றால் அது தனிமனிதனுக்குரிய தோல்வி அல்ல, நாட்டின் தோல்வியாகும். அதுமட்டுமல்ல, மீண்டும் வரிசை யுகம் உருவாகும்.
இது தேர்தல் காலம் என்பதால் சில ஜனாதிபதி வேட்பாளர்கள் அதை வழங்குவேன், இதை வழங்குவேன் என உறுதிமொழி வழங்கலாம். ஆனால் எதுவும் நடக்கப்போவதில்லை. நடைமுறைக்கு சாத்தியமான உறுதிமொழிகளை ஜனாதிபதி வழங்கியுள்ளார். எனவே, அவர் எமது மக்களுக்கு வழங்கியுள்ள வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவார்.
இவற்றைக் கருத்தில் கொண்டு நமது மக்களுக்கான வாய்ப்பாக நடைபெறுகின்ற ஜனாதிபதி தேர்தலை தமிழ் மக்கள் தமது வாக்குகளை வீணாக்காமல் நூறு வீதம் ரணிலுக்கு அளித்து பயன்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கின்றேன் .
0 comments :
Post a Comment