நாபீர் பவுண்டேஷன் அக்கரைப்பற்று மகளிர் அனுப்பினருடன் தேர்தல் சம்பந்தமான கலந்துரையாடல் நிகழ்வு.




நாபீர் பவுண்டேஷன் அக்கரைப்பற்று மகளிர் அமைப்பினருடன் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாகவும் நாபீர் பவுண்டேஷனின்‌ செயற்பாடுகள் தொடர்பாகவும் விரிவாக ஆராயும் நிகழ்வு நாபீர் பவுண்டேஷன் அக்கரைப்பற்று மகளிர் அமைப்பின் தலைவி றம்ஸானா அவர்களின் இல்லத்தில் நேற்றைய தினம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் நாபீர் பவுண்டேஷன் மகளிர் அமைப்பின் தலைவி றஹீமா செயலாளர் அறபா‌ உட்பட அக்கரைப்பற்று ஒவ்வொரு பிரிவுக்குமான மகளிர் அமைப்பின் தலைவிகள் உட்பட நாபீர் பவுண்டேஷன் உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இந் நிகழ்வில் உரையாற்றிய மகளிர் அமைப்பின் தலைவி ரஹீமா இம்முறை ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பதை நாபீர் பௌண்டேஷன் ஸ்தாபகர் பொறியியலாளர் கலாநிதி உதுமான்கண்டு நாபீர் அவர்கள் விரைவில் அறிவிக்கவுள்ளதாக குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட மகளிர் அமைப்பினர் அக்கரைப்பற்றில் நாபீர் பவுண்டேஷனின் செயற்பாடுகள் தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் நிலையில் இன்னும் சில வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக குறிப்பிட்டனர் அத்தோடு மகளிர் அமைப்பினர் அனைவரும்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நாபீர் பவுண்டேஷன் ஸ்தாபகர் பொறியியலாளர் கலாநிதி உதுமான்கண்டு நாபீர் அவர்கள் ஆதரிக்கும் வேட்பாளருக்கே வாக்களிக்க உள்ளதாகவும் குறிப்பிட்டனர்.

தொழிலதிபர் கலாநிதி உதுமான்கண்டு நாபீர் அவர்கள் நாட்டின் அரசியல் நகர்வுகளில் மக்களோடு மக்களாக நின்று சரியான முடிவினை உரிய நேரத்தில் எடுக்கும் அனுப்பவும் நிறைந்தவர் என்ற வகையில் அவர் ஆதரிக்கும் ஜனாதிபதி வேட்பாளருக்கு வாக்களிப்பதற்கு தயாராக இருப்பதாக இந்நிகழ்வில் கலந்து கொண்ட மகளிர் அமைப்பினர் குறிப்பிட்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :