கிழக்கில் சுற்றுலாத் துறையை மேம்படுத்த பறக்கும் கப்பல் சேவை; ஆளுநர் செந்தில் நடவடிக்கை; சர்வதேச நிறுவனத்துடன் ஒப்பந்தம் கைச்சாத்து




அஸ்லம் எஸ்.மெளலானா-
கிழக்கு மாகாணத்தின் சுற்றுலா துறையை மேலும் அபிவிருத்தி செய்யும் நோக்கில் பறக்கும் கப்பல் (Air-Ship) சேவையை ஆரம்பிப்பதற்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதற்காக தெற்காசியாவிலேயே முதன் முறையாக கிழக்கிலங்கையில் Air-Ship சேவையை ஆரம்பிக்கும் ஒப்பந்தத்தில் சர்வதேச Air Space நிறுவனம் மற்றும் கிழக்கு மாகாண சுற்றுலாப் பணியகம் என்பன கைச்சாத்திட்டுள்ளன.

இந்நிகழ்வு வியாழக்கிழமை (12) கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

இதன் பிரகாரம் கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மாவட்டத்தில் நிலாவெளி, மட்டக்களப்பில் மாவட்டத்தில் பாசிக்குடா, அம்பாறை மாவட்டத்தில் அருகம்பே போன்ற சுற்றுலாத் தளங்களின் இயற்கை அழகை ரசிக்கும் வகையிலும் பயணத்தை இலகுபடுத்தும் நோக்கிலும் பறக்கும் கப்பல் சேவை எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இந்நிகழ்வின்போது சர்வதேச Air Space நிறுவனத்தின் தலைவர் ஷுகரேவ் செர்ஜி நிகோலாவிச் கருத்து தெரிவிக்கையில்;

கிழக்கு மாகாணத்தில் கடந்த ஒன்றரை வருடமாக ஆளுநர் செந்தில் தொண்டமானால் சுற்றுலாத் துறையை அபிவிருத்தி செய்ய முன்னெடுக்கப்படும் வேலைத் திட்டங்கள் வளர்ச்சிப் பாதையை நோக்கி செல்வதை அவதானிக்க முடிந்தது.

அவர் இங்கு Air-Ship சேவையை ஆரம்பிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். அதற்கு அமைய கடந்த ஒரு மாத காலமாக எமது நிறுவனத்தின் அதிகாரிகள் இங்கு வந்திருந்து ஆய்வுகளை மேற்கொண்டனர். அந்த ஆய்வு அறிக்கையின் படி இவ்வேலைத் திட்டத்திற்கு நல்ல வரவேற்பு உள்ளது என்பதை அறிந்து அதற்காக முதலீடு செய்ய முன்வத்துள்ளோம் என்று குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :