கொம்பனி வீதி சந்தியில் சஜித் பிரேமதாசாவை ஆதரித்து கூட்டம்!



அஷ்ரப் ஏ சமத்-
கொழும்பு 2 கொம்பனி வீதி சந்தியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் அர்சத் நிசாமுதீன் ஏற்பாட்டில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவை ஆதரித்து கூட்டமொன்று நடைபெற்றது. அங்கு கொழும்பு முன்னாள் மாநகர சபை உறுப்னர் தாஜூத்தீன் உட்பட கட்சி ஆதரவாளர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்

இங்கு உரையாற்றிய கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் அங்கு உரையாற்றுகையில்
கொழும்பு மாவட்டம் காலம் சென்ற ஆர் பிரேமதாசாவிற்குப் பிறகு கடந்த 30 வருடங்களாக மிகவும் பின்தங்கி காணப்படுகின்றது. கடந்த காலத்தில் ஆட்சிக்கு எந்த அரசாங்கமும் கொழும்பு மத்திய தொகுதியில் எவ்வித அபிவிருத்திகளை வீடமைப்புத் திட்டங்கள் செய்யவில்லை. .இங்கு உள்ள காணிகளை பலவந்தமாக அபகரித்து வெளிநாட்டு கம்பெனிகளுக்கு விற்று அதில் தொடர்மாடி வீடுகள் ஹோடடல்களை நிர்மாணித்து பணம் சம்பாதித்தார்கள் கொழும்புக்கு நாளாந்தம் கொம்பனி வீதியில் 10 இலட்சம் மக்கள் தொழிலுக்கு வருகிறார்கள். ஆனால் கொழும்பில் உள்ள இளைஞர் யுவதிகள் தொழில் இல்லாமல் பாடசாலை இல்லாமல் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர்.. சிலர் சிறைகளில் வாடுகின்றனர்
ஆகவே தான் எமது கொழும்பு தொகுதியில் நாம் மீள அபிவிருத்திகளை காண்பதற்கும் எமக்கென பாடசாலை அபிவிருத்திக்கும் நாம் சஜித் பிரேமதாசவினை ஆதரித்து அவர் ஊடகாக இப்பிரதேசத்தின் நாம் அபிவிருத்தி காண்பதற்கு நாம் அவரை ஜனாதிபதியாக்க நாம் அனைவரும் 21 ஆம் திகதி ஆதரிக்க வேண்டும்.

இந்த கொம்பனி வீதிகள் உங்கள் வீடுகள் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசா நிர்மாணித்து வீடுகள் பழுதடைந்து வருடக்கணக்கில் கிடக்கின்றன. அவற்றினை இந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் பிரதமராக இருந்த சமயத்தில் பலமுறை முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அர்சத் நிசாமுத்தீன் நானும் சென்று கலந்துரையாடி உள்ளோம். அவர் அதனை செய்து தரவில்லை. அவருக்கு கொழும்பு மத்தியில் இதுவரை அவர் பிரதமராக இருந்த காலத்தில் எவ்வித அபிவிருத்தியும் அவர் செய்யவில்லை. கொழும்பில் பாடசாலை ஒன்றைக் கூட நிர்மாணித்து தரவில்லை.... அவர் தற்பொழுது எவ்வாறு கொழும்பில் வந்து உங்களிடம் வாக்கு கேட்பது? என பா. உறுப்பினர் முஜிபு ரஹ்மான் அங்கு குழுமியிருந்த மக்களிடம் கேள்ளி எழுப்பினார்.




எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :