தோட்டத் தொழிலாளர்களை சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களாக மாற்றுவோம் தலவாக்கலையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச



க.கிஷாந்தன்-
பால் நிலையங்களை விற்பனை செய்வது தற்போதைய ஜனாதிபதியின் பொழுதுபோக்காக இருக்கின்றது. நுவரெலியா தபால் நிலையத்தையும் விற்பனை செய்ய முயற்சிக்கின்றார். 21 ஆம் திகதி வெற்றியோடு நான் நுவரெலியாவுக்கு வருவது தபால் நிலையத்தை விற்பனை செய்ய அல்ல. லயன் அறைகளில் அடைக்கப்பட்டு இருக்கின்ற தோட்டத் தொழிலாளர்களையும், தொழில் வாய்ப்பில்லாமல் இருக்கின்ற இளைஞர்களையும் சிறு தோட்ட உரிமையாளர்களாக மாற்றுவதற்கே நான் வருவேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

அத்தோடு இந்த ஜனாதிபதியே அவரின் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளார். அநுரகுமாரவின் பிரத்தியேகச் செயலாளராவதற்கு அவர் விருப்பப்படுகின்றார். தற்பொழுது ஜனாதிபதியும் அநுரகுமாரவும் ஒன்றாக இணைந்து என்னை தோல்வியடைய செய்வதற்காக பணத்தை செலவிடுகின்றார்கள். யார் எதைச் செய்தாலும் மக்கள் என்னை வெற்றி பெறச் செய்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் கூட்டணியின் சார்பில், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும், எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவை ஆதரித்து, நுவரெலியா - தலவாக்கலையில் 08.09.2024 அன்று மதியம் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது.

தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியால் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், பிரதி தலைவர்களான வே.இராதாகிருஷ்ணன், பழனி திகாம்பரம், உதயகுமார், பாராளுமன்ற உறுப்பினர்களான மயந்த திசாநாயக்க, நளின் பண்டார, சுஜீவ சேனசிங்க, நுவரெலியா மாவட்ட அமைப்பாளர்களான ஹிரன்யா ஹேரத், அசோக சேபால உட்பட பலரும் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

இதில் உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.

200 வருடங்களுக்கும் அதிகமான வரலாற்றை கொண்ட இந்த தோட்டத் தொழிலாளர்கள் வியர்வை சிந்தி, கண்ணீர் வடித்து, இந்த நாட்டின் பொருளாதாரத்திற்கு வழங்குகின்ற ஒத்துழைப்பை மறக்க முடியாது. இந்த பக்கபலம் குறித்து நாம் பெருமைப்பட்டு அவர்களுக்கு நன்றி கூறி கௌரவ படுத்துகின்றோம். அத்தோடு இந்த நாட்டின் பிரஜைகள் என்ற வகையில் அவர்களை சமமான முறையில் ஏற்றுக் கொள்கின்றோம். தோட்டத் தொழிலாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அரசியல் ரீதியான தகுதியான பிரதிநிதித்துவத்தை வழங்குவதோடு, காணிக்கான, வீட்டுக்கான உரிமையை பெற்றுக் கொடுப்பதற்கு உறுதி பூண்டு, லயன் அறைகளுக்கு பதிலாக தனியான குடியிருப்பு கிராமங்களை அமைத்துக் கொடுப்பதற்கான அடித்தளத்தை இடுவோம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.



தோட்டத் தொழிலாளர்களை சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களாக மாற்றுவோம்.



தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 1000 ரூபா 1500 ரூபா 2000 ரூபா ஆக வழங்குவோம், பெற்றுத் தருவோம் என தேர்தல் காலங்களில் பொய் வாக்குறுதிகளை வழங்குகின்றார்கள். லயன் அறைகளில் வாழ்ந்து கூலித் தொழிலில் வாழ்க்கையை கழிக்கின்ற இந்த மக்களுக்காகவும், இந்த இளைஞர்களுக்காகவும், விவசாய காணியை வழங்கி, சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களாக மாற்றுவோம். அத்தோடு விவசாயிகளுக்கு தேவையான உரத்தை 5000 ரூபாவிற்கு வழங்குவோம் என்று கூறிய போது இந்த அரசாங்கம் அதனை 4000 ரூபாவுக்கு வழங்குவோம் என ஜனாதிபதி சொல்லிக்கொண்டு திரிவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.



தோட்டப்புறங்களுக்கு தேசியப் பாடசாலைகள்.

ஆரம்ப பாடசாலை முதல் கல்வித் துறையை மேம்படுத்துவதோடு சகல வசதிகளையும் வழங்குவோம். சிறந்த கல்வியை வழங்குவதற்காக நாம் அர்ப்பணிப்புடன் செயல்படுவோம். பாடசாலை கட்டமைப்பை பலப்படுத்துவதோடு பல புதிய தேசிய பாடசாலைகளையும் உருவாக்குவோம். சிங்களம், தமிழ், முஸ்லிம், பேக்கர் அனைவருக்கும் கல்வியிலும் சுகாதாரத் துறையிலும் முன்னேற்றத்தை கொண்டு வருவோம் என எதிர்க்கட்சித் தலைவர் இதன் போது தெரிவித்தார்.



தகவல் தொழில்நுட்பம், கணினி விஞ்ஞானம், திறன் விருத்தி கல்வி போன்றவற்றை நடைமுறைப்படுத்தி, சர்வதேச மட்டத்திலான தொழிற்பயிற்சி நிலையங்களையும் உருவாக்கி இளைஞர்களை அறிவு ரீதியாக உயர்த்துவோம். அத்தோடு நுவரெலியா இளைஞர்களுக்காக புதிய பல்கலைக்கழகம் ஒன்றையும் உருவாக்குவோம். அதன் ஊடாக புத்தாக்க துறையை கற்பித்து புதிய வர்த்தக முறைகளை விரிவுபடுத்த நடவடிக்கை எடுப்போம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :