முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஷாரபுக்கு எதிராக களமிறங்கிய பொத்துவில் மக்கள்!



அபு அலா -
லங்கை சுதந்திரம் பெற்ற பிறகு நீண்ட வருடங்களாகியும் பொத்துவிலில் இருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு பாராளுமன்ற உறுப்பினர் இருக்கவில்லை.

1977 ஆம் ஆண்டு நடைபெற்ற தொகுதி வாரியான பாராளுமன்ற தேர்தலின்போது இரட்டைத் தொகுதியாக இருந்த பொத்துவில் தொகுதிக்கு, இரண்டாவது பாராளுமன்ற உறுப்பினராக எம்.கனகரட்னம் தெரிவு செய்யப்பட்டார்.

பொத்துவிலில் பெரும்பாண்மையாக வாழுகின்ற முஸ்லிம் மக்களிடையே இருந்து 2020 ஆம் ஆண்டு வரை எவரும் மக்களால் தெரிவு செய்யப்படவில்லை. அந்த மக்களின் நீண்டகால தாகத்தையும், பாராளுமன்ற உறுப்பினர் தேவைப்பாட்டினையும் அறிந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரிஷாத் பதியூதீனால் தீர்த்து வைக்கப்பட்டது. இதனை அம்பாறை மாவட்ட மக்கள் மட்டுமல்ல ஏனைய மாவட்ட மக்களும் அறிந்த விடயமாகும்.

பொத்துவில் மக்களின் நீண்ட நாள் கனவையும் அவர்களின் தாகத்தையும் நிவர்த்தி செய்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக்கும் அதன் தலைவர் ரிஷாட் பதியூதினுக்கும் என்றும் நன்றிக்கடன் பட்டவர்களாக பொத்துவில் மக்கள் இருக்கின்றார்கள்.

2020 ஆம் ஆண்டு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சார்பில் மயில் கட்சியிலிருந்து தெரிவு செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷாரப், அந்தக் கட்சியிலிருந்து விலகி கட்சிக்கும், அதன் தலைமைத்துவத்திற்கும், அக்கட்சியின் கோட்பாட்டுக்கும் எதிராக மிக தாறுமாறாக வசைபாடி, வஞ்சித்து எள்ளி நகையாடி வந்தார்.

அது மாத்திரமல்லாமல் அக்கட்சியின் கொள்கை மற்றும் யாப்புகளுக்கெதிராகவும் முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான தீர்மானங்களுக்கும் ஆதரவு வழங்கி இனவாத அரசியல் தலைமைகளோடு இணைந்து ஒருவார கால அமைச்சு பதவிக்கும் சோரம்போனார்.

20 நாள் குழந்தையைக்கூட பார்க்காமல் ஒருமனசாட்சி இல்லாமல் எரித்தவர்களின் வீட்டில் நோன்பு திறந்து சகவாசம் பூண்டு, கோடிகளுக்கும் சுகபோகங்களுக்கும் தலைவணங்கி, முஸ்லிம் சமூகத்தையும், பொத்துவில் மக்களின் அபிலாசைகளையும் மண்ணோடு மண்ணாகப் புதைத்து மக்களை
காட்டியும் கூட்டியும் கொடுத்தார்.

பாராளுமன்ற பதவியைப் பெற்று நான்கு வருடங்களுக்குள் நான்கு இனவாத தலைமைகளோடு ஒட்டிக்கொண்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் அம்பாறை மாவட்ட மக்களுக்கோ அல்லது பொத்துவில் மக்களுக்கு ஏதேனும் பெற்றுக்கொடுத்த தீர்வு என்று பார்த்தால் அது
வெறும் பூச்சியமாகத்தான் இருக்கின்றது.

அவரின் செயற்பாடுகளினால் அவரை நம்பி வாக்களித்த அம்பாறை மாவட்ட மக்கள் குறிப்பாக பொத்துவில் மக்கள் பெரும் கவலையும் வெறுப்பும் கொண்டவர்களாக காணப்படுகின்றனர்.

முஷாரப் அம்பாறை மாவட்ட மக்களுக்கு மட்டும் துரோகம் செய்யவில்லை. அவரை முழுமையாக நம்பி வாக்களித்த சொந்த ஊரான பொத்துவில் மக்களுக்கும் பாரிய துரோகத்தை செய்துள்ளார்.

பொத்துவில் மக்களின் தேவைகளை பூர்த்திசெய்து கொடுக்க வேண்டும் என்று, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மக்கள் ஆணையை பெற்றுக்கொடுத்த அக்கட்சிக்கும், அதன் தலைமைக்கும் முஷாரப் செய்த பாரிய துரோகத்திற்கு அம்பாறை மாவட்ட மக்கள் குறிப்பாக பொத்துவில் மக்கள் அவருக்கு எதிராக அணிதிரண்டு நிற்பதையும், பொத்துவில் சார்பாக டாக்டர் ஏ.எம்.எம்.இஸ்ஸதீன்
(MBBS-Pera, PGDin Health Development-Col) என்பவரை இம்முறை நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் களமிறக்க வேண்டும் என்று ஆதரித்து நிற்பதையும் காணக்கூடியதாக இருக்கின்றது.

நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் அம்பாறை மாவட்ட மக்களின் நன்மதிப்பையும் அபிமானத்தையும் கொண்ட இலங்கை பேராதனிய பல்கலைகழகத்தின் மருத்துவப் பட்டம் பெற்ற டாக்டர் ஏ.எம்.எம்.இஸ்ஸதீன் (MBBS) என்பவரை நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் களமிறக்க வேண்டும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரிஷாத் பதியூதீனுக்கு பொத்துவில் மக்களினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

டாக்டர் ஏ.எம்.எம்.இஸ்ஸதீன் என்பவர், அம்பாறை மாவட்டத்திலுள்ள நிந்தவூர், அட்டாளைச்சேனை, பொத்துவில் போன்ற பல பிரதேசங்களில் வைத்திய சேவையை வழங்கியதுடன், சுகாதார வைத்திய அதிகாரியாகவும் இருந்து கொண்டு பல சேவைகளை வழங்கியுள்ளார். அதுமட்டுமின்றி பல அமைப்புக்களின் தலைவராக இருந்துகொண்டு சமூக சேவைகளை வழங்கியதுடன், குறிப்பாக சுனாமிக்குப் பின்னர் பொத்துவில் லகுகல எல்லையில் "இஸ்ஸதீன் சதுக்கம்" என்ற கிராமத்தை உருவாக்கி லயன்ஸ் கிளப் அமைப்பின் மூலமாக சுமார் 100 வீடுகளை அமைத்துக் கொடுத்துள்ளார்.

ஒரு டாக்டராக இருக்கும் இவரால் இவ்வாறான சேவைகளை வழங்க முடியுமாக இருந்தால், கடந்த நான்கு வருடங்களுக்கு மேலாக பாராளுமன்ற உறுப்பினராக இருந்த முஷாரபினால் ஏன் செய்ய முடியாமல் போனது? என்ற கேள்வியையும் பொத்துவில் மக்கள் கேட்கின்றனர்.

எனவே, இம்முறை நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக டாக்டர் இஸ்ஸதீனை களமிறங்குமாறு திகாமடுல்ல மாவட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆதரவாளர்கள் கேட்டுக்கொள்கிறனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :