சஜித் பிரேமதாச அவர்களை ஆதரித்து ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரச்சார கூட்டம்



மாளிகைக்காடு செய்தியாளர்-
க்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச அவர்களை ஆதரித்து ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மாளிகைக்காடு கிழக்கு வட்டார உள்ளூராட்சி மன்ற வேட்பாளர் எம்.எச். நாசர் தலைமையில் பிரச்சார கூட்டம் இன்று (17) மாளிகைக்காடு பிரதேசத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தலைவரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான, பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தலைவரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான, பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தலைவரும், முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், கட்சியின் பிரதித் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஐ.எம்.மன்சூர், பிரதி தேசிய அமைப்பாளரும், கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சருமான எம்.எஸ் உதுமாலெப்பை, கட்சியின் உச்ச பீட உறுப்பினரும், அம்பாறை மாவட்ட செயற்குழுவின் செயலாளருமான ஏ.சீ.சமால்டீன், கல்முனை மாநகர சபை முன்னாள் மேயரும், உச்ச பீட உறுப்பினருமான கலாநிதி சிராஸ் மீராசாகிப், மாளிகைக்காடு அமைப்பாளர் எம்.எச்.எம். இஸ்மாயில், மாளிகைக்காடு மத்தி தலைவர் ஏ.எல்.இம்தியாஸ் மற்றும் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :