"வர்க்கப் போராட்டத்தின் மூலமாக சுரண்டலை ஒழித்து சமதர்ம ஆட்சியை தாபித்தல்" எனும் கம்யூனிச சித்தாந்தத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட ஒரு போராட்ட இயக்கம்.
இந்த இயக்கத்துக்கு அறம் மதம் என்பதெல்லாம் விஷயமே அல்ல.
அரசற்ற அராஜக சமூகம் ஒன்றை உருவாக்கி அதன் மூலம் வர்க்க பேதமற்ற இலட்சிய மக்கள் அரசை உருவாக்குதல் எனும் நடைமுறைக்கு சாத்தியமற்ற இலக்கை தன்னுடைய பாதையாகக் கொண்டது.
சுருங்கச் சொன்னால் 1965 ஆம் ஆண்டு ரோகனை விஜய வீர என்பவரால் அன்றைய காலனித்துவக் கொள்கைகளால் தொழில் வாய்ப்புகளை இழந்தும் புறக்கணிக்கப்பட்டும் நின்ற இளைஞர்களை இணைத்து உருவாக்கப்பட்ட ஒரு சிங்கள பெருந் தேசியவாத கட்சி.
இந்த சித்தாந்தம் நமது பிராந்தியத்தை பொறுத்தவரையில் அல்லது புவிசார் கேந்திர அரசியல் நிலவரங்களை பொருத்தளவில் இலங்கைக்கு கடும் மோசமான அரசியல் பொருளாதார ராஜதந்திர விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது.
1971 ஆம் ஆண்டு சிங்கள இளைஞர்களிடம் கடுமையான செல்வாக்கை செலுத்தி குறிப்பாக பல்கலைக்கழக மாணவர்களை மூளை சலவை செய்து அரச இயந்திரத்துக்கு எதிராக மிகப்பெரிய கிளர்ச்சி நடவடிக்கைகளை மேற்கொண்டது.
"சே குவேரா" போன்ற கம்யூனிஸை மார்க்சிய புரட்சியாளர்களின் பெயரால் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் போலீசார் அரச உத்தியோகத்தர்கள் என அப்பாவி பொதுமக்கள் மிக மோசமாக ஜேவிபி கிளர்ச்சி குழுக்களால் கொலை செய்யப்பட்டனர்.
இறுதியில் ஜேவிபி கிளர்ச்சியாளர்கள் மிக மோசமாக அடக்கி ஒடுக்கப்பட்டனர்.
தாங்கள் விரும்பும் இலட்சிய சமூகம் ஒன்றை எவ்வாறு அடைவது என்பதற்கான கொள்கை ரீதியான விளக்கங்களால் ஞனரஞ்சகப்படுவது அன்றி இதுவரை ஆட்சி செய்து வரும் ஆட்சியாளர்களின் தவறுகளை பூதாகரப்படுத்தி அவைகளால் உருவாக்கப்படும் மக்களின் அறச்சீற்றத்தை அதிகாரத்தை கைப்பற்றும் அவர்களது கபடத்தனமான பசிக்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
இப்பொழுது ஜேவிபியை ஆதரிக்கும் பலர் கடந்த தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை ஆதரித்த 69 இலட்சம் வாக்காளர்கள்தான். இவர்கள் ஜேவிபியின் மார்க்சிய கம்யூனிச சித்தாந்தத்தால் கவரப்பட்டவர்கள் அல்ல.
ஜேவிபி பெரும்பான்மை மக்களை கவர்வதற்காக மிகக் கடுமையான இனவாதத்தை கடந்த காலங்களில் கடைப்பிடித்து வந்திருக்கிறது.
இந்த நாட்டின் முன்னோடி இனவாதிகள் பலர் இந்த ஜேவிபியின் கருவறைகளில் பிறந்திருக்கிறார்கள்.
விமல் வீர வங்ச சோம வங்ச அமரசிங்க போன்ற பல இனவாதிகள் கடந்த காலங்களில் சிறுபான்மையினருக்கு எதிராக தீவிரமான பரப்புரைகளை செய்து வந்திருக்கிறார்கள்.
அவர்களுடைய ஐந்து வகுப்பு கொள்கை கட்டமைப்பில் இந்திய எதிர்ப்புக் கொள்கையும் ஒன்று. ஸ்ரீமா சாஸ்திரி ஒப்பந்தத்தின் மூலம் அப்பாவி தோட்ட தொழிலாளர்களின் குடியுரிமை பறிக்கப்பட்ட பொழுது அதை கொண்டாடியவர்கள் இந்த ஜேவிபி யினர். மலையகத் தோட்ட தொழிலாளர்களை இந்தியாவின் ஐந்தாம் படையாக வருணித்தார்கள்.
இலங்கையின் இனப் பிரச்சினைக்கு தீர்வாக முன்வைக்கப்பட்ட ஆகக் குறைந்த அதிகார பரவலாக்கள் திட்டமான இலங்கை இந்திய உடன்படிக்கையை கூட மிகக் கடுமையாக எதிர்த்தார்கள். ஆனால் இலங்கை இனப் பிரச்சினைக்கு என்ன தீர்வு என்று அவர்கள் இன்றுவரை சொல்லவே இல்லை.
2005 ஆம் ஆண்டு அம்பாறை மாவட்டத்தில் இருந்து தமிழ் பேசும் தென்கிழக்கு மக்களுக்காக அவர்களுடைய அன்றாட நிர்வாக அலுவலர்களை தமிழ் மொழியில் கொண்டு நடத்துவதற்காக ஒரு நிர்வாக மாவட்டத்தையேனும் பெற்றுக் கொள்ளும் முகமாக கரையோர நிர்வாக மாவட்ட கோரிக்கை முன்வைக்கப்பட்ட பொழுது அதைக் கூட மோசமாக எதிர்த்தார்கள்.
இவர்களுடைய அரச கொள்கை என்பது மதச்சார்பற்ற அரசை நிறுவுவதாகும். இலங்கையினுடைய கலாச்சார பண்பாட்டுக் கட்டமைப்பில் செல்வாக்கு செலுத்துகின்ற மூன்று பிரதான மதங்களும் உலக அளவில் மிக செல்வாக்கு செலுத்துகின்ற மாதங்கள் ஆகும். இளைஞனுடைய அரசியலமைப்புச் சட்டத்தில் பௌத்த மதத்திற்கு முதன்மை இடம் வழங்கப்படுவது என்பதே சர்ச்சைக்குரியது. இலங்கையில் எந்த மதத்திற்கும் ஒரு மதத்தை விட முக்கியத்துவம் கொடுக்கலாகாது என்பது வரவேற்கத்தக்கது. ஆனால் எந்த மதங்களும் மற்ற இலங்கை என்பது மிகவும் ஆபத்தானது. அதனால் தான் அவர்கள் ஓரினச்சேர்க்கையை ஒரு ஒழுக்க ஈனமான விடயமாக கருதவில்லை. அவர்களுடைய பார்வையில் மதுச்சாலையும் விபச்சாரமும் பாடசாலையும் பள்ளிவாசலும் சமமானதே. ( இதுதான் அவர்களது கொள்கை ஆனால் இதை இலங்கை போன்ற சமூக பண்பாட்டுக் கட்டமைப்பு ஏற்றுக் கொள்ளாது என்பதால் இதிலே நம்மை ஏமாற்றுவதற்காக நமக்கு சார்பாக வாதிட்டு கொள்வார்கள்)
இந்த நாட்டில் மிகக் கொடூரமான யுத்தம் மனித உரிமை மீறல்கள் பாரபட்சம் இவைகள் எல்லாம் நடந்த பொழுது இவர்கள் தூபம் போடுவதிலே முதன்மையானவர்களாக இருந்தார்கள். ஒரு மார்க்சிஸ்ட் இடதுசாரி சித்தாந்தத்தை வழிமுறையாக கொண்டவர்கள் போல இவர்கள் ஒரு நாளும் இருக்கவில்லை.
சுனாமி பொதுக்கட்ட அமைப்பு #PTOMS இடைக்கால தன்னாட்சி அதிகார சபை #ISGA யுத்த நிறுத்த உடன்படிக்கை #Ceasefire_Agreement போன்றவற்றை கடுமையாக எதிர்த்ததுடன் 2006 ஆம் ஆண்டு யுத்தத்தை ஆயுத ரீதியாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று மஹிந்த அரசாங்கத்தை மிக கடுமையாக வலியுறுத்தினார்கள். அவர்கள் ஒரு நாளும் சிறுபான்மை மக்களுக்கான சுய நிர்ணயத்தையோ அல்லது வேறு வகையான அதிகார பகிர்வுகளையும் அங்கீகரிக்கவில்லை.
இந்த நாட்டின் கொடூரமான பெருந்தேசியவாக இனவாத அமைப்புகளுக்கு எதிராக இவர்கள் ஒருநாளும் வாய் திறக்கவில்லை.
இவர்களுடைய இலக்கெல்லாம் இனவாதத்தையும் பெருந்தேசிய வாதத்தையும் விதைத்து பெரும்பான்மை மக்களுடைய ஆதரவை பெற்று அதன் மூலம் ஒரு அரசாங்கத்தை அமைத்து எல்லோருக்கும் பொதுவான ஆட்சி ஒன்றை நிறுவுவதே இவர்கள் அதை இலக்கு. அதில் சிறுபான்மை பெரும்பான்மை என்றெல்லாம் கிடையாது.
ஆக ஜேவிபி என்பது சந்தர்ப்பத்தை மிகவும் நுட்பமாகப் பயன்படுத்தி அதிகாரத்தைப் பெற்று இந்த நாட்டினுடைய பண்பாட்டுக்கும் கலாச்சாரத்திற்கும் கேந்திர அரசியலுக்கும் பொருத்தம் இல்லாத அரசாங்கம் ஒன்றை நிறுவி இந்த நாட்டை தொடர்ந்தும் கொலைக்களமாக மாற்றுவது என்பதில் எனக்கு எந்த விதமான ஐயமும் இல்லை.
புவிசார் அரசியல் கேந்திர முக்கியத்துவத்தின் அடிப்படையில் இலங்கைத் தீவை ஜேவிபி அல்லது தேசிய மக்கள் சக்தியால் ஒரு நாளும் ஆள முடியாது இந்த நாடு தொடர்ச்சியாக அரசியல் குழப்பமும் பொருளாதாரச் சீர்கேடும் உள்நாட்டு தீவிரவாதமும் நிலைபெற்ற நாடாக நிச்சயம் இருக்கும் என்பதில் ஐயமில்லை.
0 comments :
Post a Comment