சேனைக்குடியிருப்பு (PMCU) வைத்தியசாலையில் தொற்றா நோய் கிளினிக் ஆரம்பம்



றியாஸ் ஆதம்-
சேனைக்குடியிருப்பு ஆரம்ப மருத்துவ பராமரிப்பு (PMCU) வைத்தியசாலையில் தொற்றா நோய் (NCD) கிளினிக் மற்றும் அதற்கான பரிசோதனைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சகீலா இஸ்ஸடீன் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் பிராந்திய பிரிவுத் தலைவர்களின் ஒத்துழைப்புடன் குறித்த கிளினிக் வசதிகள் ஏற்படுத்தப்பட்டு தற்போது மிகவும் சிறப்பாக இடம்பெற்று வருகிறது.

தொற்றா நோய் கிளினிக் மற்றும் அதற்கான பரிசோதனைகள் ஆரம்பிக்கப்பட்டதனால் நற்பிட்டிமுனை மற்றும் சேனைக்குடியிருப்பு மக்கள் பெரிதும் நன்மையடைந்து வருவதுடன் வெளிநோயாளர் பிரிவிலும் தினமும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

டொக்டர் எம்.பி.எம்.சில்மி குறித்த வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரியாக நியமிக்கப்பட்டதன் பின்னர் NCD கிளினிக் வசதிகள் ஏற்படுத்தப்பட்டதுடன் தற்போது அவ்வைத்தியசாலை பல்வேறு வழிகளிலும் முன்னேற்றமடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

35 வயதுக்கு மேற்பட்ட சகலரும் சேனைக்குடியிருப்பு வைத்தியசாலையில் pressure, Sugar, cholesterol, BMI ஆகியவற்றினை பரிசோதனை செய்துகொள்ள முடியும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :