திருமலையில் மூன்று கட்சிகள்,03 சுயேட்சை குழுக்களும் நிராகரிப்பு-உதவி தேர்தல் ஆணையாளர் ஆர்.சசீலன்



ஹஸ்பர் ஏ.எச்-
டைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் 20 அரசியல் கட்சிகளும் மற்றும் 17 சுயேட்சை குழுக்கள் வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில் அதில் 17 அரசியற் கட்சிகளும் 14 சுயேட்சை குழுக்களும் பரிசீலிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது இதில் மூன்று கட்சிகளும் மூன்று சுயேட்சை குழுக்களும் நிராகரிக்கப்பட்டதாக திருகோணமலை மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் ஆர்.சசீலன் தெரிவித்தார்.

வேட்புமனுவின் பின் திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இன்று (11) மாலை இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும்தெரிவிக்கையில் தேசிய ஜனநாயக முண்ணனி, அகில இலங்கை தமிழர் மகா சபை, ஐக்கிய தேசிய சுதந்திர கூட்டமைப்பு உட்பட மூன்று சுயேட்சை குழுக்களுமே இவ்வாறு நிராகரிக்கப்பட்டது. சத்தியக் கடதாசி சமர்ப்பிக்காமை , சரியான முறையில் விண்ணப்பம் கையளிக்காமை உள்ளிட்ட காரணங்களால் நிராகரிக்கப்பட்டது.
4ம் திகதி தொடக்கம் 11 ம் திகதி இன்று வரை மதியம் 12.00 மணிவரை குறித்த வேட்பு மனு தாக்கல் இடம் பெற்றதாகவும் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :