எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் ஏழு உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 640 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றார்கள்.
இம்முறை 50 சுயேட்சைகள் 22 கட்சிகள் அடங்கலாக 72 குழுக்கள் தமது வேட்புமனுவை தாக்கல் செய்திருந்தனர் .
இருப்பினும் வெள்ளிக்கிழமை இறுதி நேர கூட்டத்தில் 2 கட்சிகள் நிராகரிக்கப்பட 64 குழுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன என்று மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான சிந்தக அபேவிக்ரம அறிவித்தார்.
இம் முறை பாராளுமன்ற தேர்தலில் இலங்கையில் அதிகூடிய 64 குழுக்கள் போட்டியிடுவது அம்பாறை மாவட்டத்தில் என்பது சாதனைப் பதிவாகும்.
எட்டு குழுக்கள் நிராகரிக்கப்பட்ட பின்னர் தற்போது 20 கட்சிகளும் 44 சுயேச்சை குழுக்களும் களத்தில் குறித்துள்ளன.
2024 பொதுத் தேர்தலில் 22 தேர்தல் மாவட்டங்களில் 690 குழுக்கள் போட்டியிடப் போவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
74 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
ஏதேனும் அநீதிகள் இடம்பெற்றுள்ளதாக உணர்ந்தால் அந்த குழுக்கள் நீதிமன்றத்திற்கு செல்ல முடியும் எனவும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.
திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்திலேயே அதிக எண்ணிக்கையிலான அரசியல் குழுக்கள் போட்டியிடுவதுடன், அதன் எண்ணிக்கை 64 ஆகும்.
மொனராகலை மற்றும் பொலன்னறுவை தேர்தல் மாவட்டங்களில் குறைந்த எண்ணிக்கையிலான அணிகள் போட்டியிடுவதுடன், அங்கு தலா 15 அணிகள் போட்டியிடுகின்றன.
0 comments :
Post a Comment