இஸ்மாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழிபீடத்தின் பீடாதிபதியும் ஆய்வரங்கின் தலைவருமான அஷ் செய்க் எம்.எச்.ஏ. முனாஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பதில் உபவேந்தர் கலாநிதி யூ.எல். அப்துல் மஜீத் கலந்து கொண்டு உரையாற்றினார்.
Intsymfia-2024 இன் இணைப்பாளர் கலாநிதி எப். எச்.ஏ. சிப்லியின் வழிகாட்டலில் இடம்பெற்ற குறித்த நிகழ்வுக்கு பிரதான பேச்சாளராக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவரும் மனிதநேயம் மற்றும் சமூக அறிவியல் நிலைக் குழுவின் தலைவருமான சிரேஷ்ட பேராசிரியர் பிரேமகுமார டி சில்வா நிகழத்தினார்.
ஆய்வரங்குக்கு கௌரவ அதிதியாக சவூதி அரேபியாவின் றியாத்தில் உள்ள இமாம் மஹ்மூத் பின் சஹுத் இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கலாநிதி சாட் பின் சஹூத் ஐடா அல் கர்ணி பங்குகொள்ளவிருந்தார், தவிர்க்கமுடியாத காரணத்தினால் அவர் பங்குகொள்ளாததனால் அவரது செய்தியை இஸ்லாமிய கற்கைகள் துறையின் தலைவர் கலாநிதி எஸ்.எம்.எம். நபீஸ் வாசித்தார்.
Intsymfia-2024 ஆய்வரங்கில் 65 ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டன.
நிகழ்வின்போது பீடாதிபதிகளான பேராசிரியர் எம்.எம். பாஸில், பேராசிரியர் ஏ.எம்.எம். முஸ்தபா, பேராசிரியர் எம்.ஏ.எல். அப்துல் ஹலிம், பதில் பதிவாளர் எம்.ஐ. நௌபர், நூலகர் எம்.எம். றிபாவுடீன், பல்கலைக்கழக வேலைப்பகுதி பொறியலாளர் எம்.எஸ்.எம். பஸில், சிரேஷ்ட உதவி பதிவாளர் எம்.எச். நபார், பேராசிரியர்கள், சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட விரிவுரையாளர்கள் நிர்வாக உத்தியோகத்தர்கள் கல்விசாரா உத்தியோகத்தர்கள் ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பித்தோர் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
0 comments :
Post a Comment