கல்முனை கல்வி வலய கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின் பவள விழாவை முன்னிட்டு பாடசாலை பழைய மாணவர்கள் சங்கம் ஏற்பாடு செய்துள்ள ஸாஹிரா பிரீமியர் லீக் 2024 ஆரம்ப நிகழ்வு மற்றும் பாடசாலையின் எதிர்கால பவள விழா தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பு இன்று (20) பாடசாலை முதல்வர் எம்.எச். ஜாபீர் தலைமையில் பாடசாலை தொழில்நுட்ப மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த ஊடக சந்திப்பில் பாடசாலை அதிபர், பாடசாலை பழைய மாணவர்கள் சங்க செயலாளர் சட்டத்தரணி ஸஹ்பி எச். இஸ்மாயில், உப தலைவர் பொறியியலாளர் ஏ.ஆர்.எம். பர்ஹான், பொருளாளர் தொழிலதிபர் என்.எம். றிஸ்மீர் ஆகியோர் கருத்து வெளியிட்டனர். 32 அணிகள் பங்குபற்றுகின்ற இந்த ஸாஹிரா பிரீமியர் லீக் 2024 கிரிக்கெட் சுற்றுப்போட்டி எதிர்வரும் 25, 26, 27 ஆம் திகதிகளில் பகல், இரவு போட்டிகளாக நடைபெற உள்ளதாக அறிவித்துள்ளனர்.
மேலும் பாடசாலை தேவைகளுக்கான பஸ் கொள்வனவுக்கு நிதியம் ஒன்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் முடியுமானவர்கள் தனியாகவோ அல்லது குழுக்களாகவோ நிதியுதவி வழங்க முடியும் என்று தெரிவித்தனர். அதனுடன் இணைந்ததாக பவள விழாவை முன்னிட்டு நடைபெறவுள்ள Zahirians Walk நிகழ்வுக்கு பாடசாலையின் பழைய மாணவர்கள் சகலரும் கலந்து கொள்ள வேண்டும் என பகிரங்க அழைப்பும் இதன்போது விடுக்கப்பட்டுள்ளது.
Zahirians Walk நிகழ்வுக்கு வெளியிடப்படவுள்ள டீ சேர்ட்டினை பாடசாலையின் பழைய மாணவர்கள் சகலரும் கொள்வனவு செய்து பாடசாலையின் அபிவிருத்திற்கு பங்களிப்பு செய்யுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. பாடசாலை பஸ் கொள்வனவுக்காக ஸஹிரியன் 90 யினர் ரூபா 5 லட்சம் நிதியை கையளிக்கும் ஆவணத்தை இதன்போது கையளித்தனர். இந்நிதி கையளிப்பு ஆவணத்தை பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு செயலாளரும், ஸஹிரியன் 90 உறுப்பினருமான வைத்தியர் சனூஸ் காரியப்பர், இலங்கை வங்கி முகாமையாளர் முஸ்தகீம் மௌலானா ஆகியோர் தலைமையிலான குழுவினரால் பாடசாலை பழைய மாணவர்கள் சங்க நிர்வாகிகளிடம் கையளித்து வைக்கப்பட்டது.
0 comments :
Post a Comment