தென்கிழக்கு பல்கலைக்கழக ஸ்தாபகர் தினமும், 25 வருட சேவையை பூர்த்தி செய்தவர்களுக்கு கௌரவமும்!! (படங்கள் இணைப்பு)



ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவரும் முன்னாள் அமைச்சருமான மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களால் அம்பாறை, ஒலுவிலில் ஸ்தாபிக்கப்பட்ட இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 28 வருட பூர்த்தியும் பல்கலைக்கழகத்தில் 25 வருடங்களுக்கு மேலாக பணிபுரிபவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு, கால்பந்தாட்ட போட்டியில் பல்கலைக்கழக மட்டத்தில் தேசிய ரீதியில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான கௌரவம் மற்றும் மரநடுகையும் 2024.10.23 ஆம் திகதி இடம்பெற்றது.

அத்துடன் பல்கலைக்கழகத்தின் 28வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், Main gate மற்றும் FAC Junction இடையே, வார நாட்களில் இலவச ஷட்டில் பேருந்து சேவையும் பதில் உபவேந்தரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

ஏ.ஆர். மன்சூர் ஞாபகார்த்த பிரதான மண்டபத்தில் இடம்பெற்ற இன் நிகழ்வுக்கு பதில் பதிவாளர் எம்.ஐ. நௌபர் தலைமை வகித்தார். பதில் உபவேந்தர் கலாநிதி யூ.எல். அப்துல் மஜீத் பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்தார்.

தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி எம்.ஏ.எல். அப்துல் ஹலிமின் வரவேற்ப்புரையுடன் ஆரம்பமான நிகழ்வில்; கலாநிதி எம்.எச்.எம். அஷ்ரப் ஞாபகார்த்த விஷேட உரையை சிரேஷ்ட பேராசிரியர் கலாநிதி றமீஸ் அப்துல்லாஹ் நிகழ்த்தினார்.

அவரது உரையில் மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் நாட்டின் அரசியல் வரலாற்றில் சுமார் 80 வருடங்களின் பின்னர் புதியதோர் ஆட்சி மாற்றம் இடம்பெற முதல் புள்ளியாக இருந்தார் என்று தெரிவித்தார். அதாவது பாராளுமன்ற பிரவேசத்தில் 5% என்ற மாற்றமே இன்று நாட்டில் பாரிய மாற்றம் ஏற்பட காரணமாக அமைந்தது என்று தெரிவித்தார்.

தமிழர்களும் முஸ்லிம்களும் தங்க செயின் போன்று இருக்க வேண்டும் என எதிர்பார்த்த அஷ்ரப், சிங்கள சமூகத்தோடும் இரண்டற கலந்து வாழவேண்டும் என்ற சிந்தனையுடனேயே அவரது செயற்ப்பாடுகள் இருந்ததாகவும், தென்கிழக்கு பல்கலைக்கழகம் எல்லா சமூகத்தினரும் இணைந்து கற்க வேண்டிய தளமாக இருக்க வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டதாகவும்; அந்த ஆசை நிறைவேறியுள்ளதாகவும், இதுவரை இந்த பல்கலைக்கழகத்துக்குள் இனரீதியான எவ்வித பிரச்சினைகளும் இடம்பெற்றதில்லை என்றும் தெரிவித்தார்.

நிகழ்வின்போது 25 வருடங்களுக்கு மேலாக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பணியாற்றிவரும்; வி. பவானந்தன் வெள்ளி பதக்கத்தையும் பேராசிரியர் கலாநிதி எஸ்.எம். மசாஹிர், பேராசிரியர் கலாநிதி எச்.எம்.எம். நளீர், சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.எல். இஸ்ஸடீன், பதில் பதிவாளர் எம்.ஐ. நௌபர், பிரதி பதிவாளர் எம்.ஏ.சி.எம். றமீஸ், யூ.எல். மன்சூர் மற்றும் எஸ்.எச். பர்ஸானா முஸ்தபா, எஸ்.எல்.எம். சுபியான், எஸ்.எம். முஹமட் ஹுசைன், எம்.எல். பக்கீர் முகைடீன், பி.ரீ, சின்னலெப்பே, எஸ்.எம்.ஹம்சார், ஏ.கே. சித்தி ஜெசீலா, எம்.ஏ.எம். இஸ்மாயில், ஜெ.எம். நவரத்ன, ஆர். ஜெயகாந்தன், யூ.கே. அப்துல் நஸீர், ஐ. முஹமட் நபீல், எஸ்.எல். அகமட்லெப்பை, ஜெ. ஆப்டீன், எம்.ஐ. முஹமட் அலி, எம்.எல். நிஸார், வி. ரவீந்தரன், எஸ். முஹமட் ஜாபீர், யூ.எல். மன்சூர், ஐ.எல். றஹ்மத்துல்லாஹ், ஏ.எச்.ஏ. சுபுஹான், எம்.எச். ஹனீசார், பி.ரீ. எம். ஹக்கீம், ஏ.எல்.எம். பைரோஜி ஆகியோர் வெண்கல பதக்கங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகமானது; 1996 ஆம் ஆண்டு பல்கலைக்கழகமாக தரமுயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து இன்றுவரை பல்வேறு அடைவுகளை எட்டியுள்ளது. கலை கலாசார பீடம் மற்றும் முகாமைத்துவ வர்த்தக பீடம் ஆகிய இரண்டு பீடங்களுடன் ஆரம்பித்த இப்பல்கலைக்கழகம் அவற்றுடன் பிரயோக விஞ்ஞான பீடம், இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழிப் பீடம், பொறியியல் பீடம், தொழில்நுட்ப பீடம் என மொத்தமாக 6 பீடங்களுடன் தற்போது இயங்கி வருகின்றது.

அத்துடன் பிரம்மாண்டமான நூலகம், புதிய பாடத்திட்டங்கள், தென்கிழக்கு மக்களின் வாழ்வியல் வரலாற்றைப் படம்பிடித்துக் காட்டும் தொல்லியல் அருங்காட்சியகம், பீட நூலகங்கள், ஆய்வுக் கழகங்கள், ஆய்வுமன்றங்கள், நூல் கலந்துரையாடல்கள் என பல வளங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நிகழ்வின்போது பீடாதிபதிகளான பேராசிரியர் கலாநிதி எம்.எம். பாஸில், பேராசிரியர் கலாநிதி ஏ.எம்.எம். முஸ்தபா, கலாநிதி எம்.எச். ஹாறுன், அஷ் செயக் எம்.எச்.ஏ. முனாஸ், நூலகர் எம்.எம். றிபாவுடீன் மற்றும் பதில் பதிவாளர் எம்.ஐ. நௌபர், பதில் நிதியாளர் சி.எம். வன்னியாராச்சி, பல்கலைக்கழக பொறியியலாளர் எம்.எஸ்.எம். பஸில், பிரதம பாதுகாப்பு அதிகாரி ஏ.எம். ஜாபீர், உள்ளிட்ட நிர்வாக உத்தியோகத்தர்கள் பேராசிரியர்கள் சிரேஷ்ட, கனிஷ்ட விரிவுரையாளர்கள் கல்விசாரா உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொடிருன்தனர்.























































































இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :