க.பொ.த.(சா/த) பரீட்சையில் தமிழ் மொழி மூலம் 26 (9"A") சித்தி பெற்று கல்முனை கல்வி மாவட்டத்தில் மஹ்மூத் பாலிகா முன்னிலை



மாளிகைக்காடு செய்தியாளர்-
2023 (2024) க.பொ.த.சா/த பரீட்சையில் அதிக அளவு 9"A" பெற்ற முதல் 60 பாடசாலைகளில் 10 தமிழ் மொழி மூலப் பாடசாலைகள் சாதனை படைத்துள்ளன. வடமாகாணத்தில் நான்கு பாடசாலைகளுக்கும், கிழக்கு மாகாணத்தில் ஐந்து பாடசாலைகளும் அதில் உள்ளடங்கியுள்ளன.

இச்சாதனையில் கிழக்கு மாகாணத்தில் ஜந்து பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன அதில் நான்கு பாடசாலைகள் மட்டக்களப்பு மாவட்டத்திற்குரியன அதில் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி மட்டுமே கல்முனை கல்வி மாவட்டத்திற்குரியது என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தரவுகளானது பெண் பாடசாலைகளை அடிப்படையாகக் கொண்டு கணக்கெடுக்கப்பட்ட புள்ளிவிபரமானது. இவ்வெற்றியின் மூலம் கல்லூரிக்கு பெருமை சேர்த்த மாணவிகள், மாணவிகளை பல வழிகளிலும் திறன்பட
பயிற்றுவித்த பாட இணைப்பாளர்கள், ஆசிரியர்கள் அனைவருக்கும் மற்றும் மாணவிகளின் பெற்றோர்களுக்கும் பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள், பகுதித் தலைவர்கள், ஆசிரியர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு உறுப்பினர்கள், பழைய மாணவிகள் சங்க உறுப்பினர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் அனைவரும் கல்லூரியின் அதிபர் ஏ.பி. நஸ்மியா சனூஸ் (SLEAS) நெஞ்சார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :