கிழக்குப் பல்கலைக்கழக 28ஆவது பட்டமளிப்பு விழா.



கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 28ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா ஒக்டோபர் 5 மற்றும் 6ம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கம் அவர்களின் நெறிப்படுத்தலில், பல்கலைக்கழக நல்லையா ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெறவுள்ள 2023ம் ஆண்டுக்கான இப்பட்டமளிப்பு விழாவில் உள்வாரி, வெளிவாரி, கலாநிதி மற்றும் பட்டப்பின்படிப்பு என 2340 பட்டங்கள் உறுதி செய்யப்படவுள்ளன.

இரண்டு நாட்கள், ஏழு அமர்வுகளாக நடைபெறவுள்ள பட்டமளிப்பு விழாவில், கிழக்குப் பல்கலைக்கழக வேந்தர் ஓய்வுநிலை பேராசிரியர் மா.செல்வராஜா தலைமை தாங்கவுள்ளதுடன் பட்டங்களையும் உறுதிசெய்யவுள்ளார்.

நிகழ்வின் பிரதம விருந்தினராக, இலங்கைக்கான இந்தியத் துணைத் தூதுவர் (யாழ்ப்பாணம்) ஸ்ரீ சாய் முரளி அவர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளதுடன் மற்றும் பல அதிதிகளும் கலந்து கொள்ளவுள்ளனர்.

பட்டமளிப்பு விழாவின் முதலாம் நாள், முதலாவது அமர்வின்போது, 2 கலாநிதிப் பட்டங்கள், 01 முதுதத்துவமாணி, 02 விஞ்ஞான கல்வியில் முதுமாணி, 01 விவசாய விஞ்ஞானத்தில் முதுமாணி, 58 கல்வியியல் முதுமாணி, 04 கலை முதுமாணி, 05 வியாபார நிர்வாக முதுமாணி, 31 அபிவிருத்தி பொருளியல் முதுமாணி அத்துடன் வைத்தியமாணி, சத்திரசிகிச்சைமாணி, சிறப்பு தாதியியல் விஞ்ஞானமாணி, தாதியியல் விஞ்ஞானமாணி, சிறப்பு விவசாய விஞ்ஞானமாணி, விவசாய விஞ்ஞானமாணி என 153 பட்டங்கள் வழங்கப்படவுள்ளன.

மேலும், வணிக நிர்வாகமாணி, சிறப்பு வணிக நிர்வாகமாணி, சந்தைப்படுத்தல் முகாமைத்துவத்தில் சிறப்பு வணிக நிர்வாகமாணி, மனிதவள முகாமைத்துவத்தில் சிறப்பு வணிக நிர்வாகமாணி, சிறப்பு வணிகவியல்மாணி, வணிகவியல்மாணி, கணக்கீடு மற்றும் நிதியியல் சிறப்பு வணிகவியல் மாணி, வணிக பொருளியல் சிறப்பு வணிகவியல் மாணி, விஞ்ஞானமாணி, சிறப்பு விஞ்ஞானமாணி என 333 பட்டங்களும், சித்தமருத்துவம் - சத்திர சிகிச்சை இளமாணி, சிறப்பு விஞ்ஞானமாணி, கணினி விஞ்ஞானமாணி விவசாய தொழில்நுட்பம் மற்றும் முயற்சியாண்மையில் உயிர்முறைமைகள தொழில்நுட்ப கௌரவ இளமாணி, தொடர்பாடல் கற்கைகளில் கலைமாணி, மொழியியல் கலைமாணி, என 424 பட்டங்களும்,

நுண்கலைமாணி - இசை, நுண்கலைமாணி – நடனம், நுண்கலைமாணி – நாடகமும் அரங்கியலும், நுண்கலைமாணி - கட்புலமும் தொழிநுட்பவியல் கலையும் எனும் வகையில் 204 பட்டங்கள் முதலாம் நாளில் முறையே 2வது, 3வது, 4வது அமர்வுகளில் வழங்கப்படவுள்ளன.

அத்துடன், கல்விமாணி, மற்றும் கலைமாணி (விசேட பட்டம்) என 321 பட்டங்களும் கலைமாணி (பொதுப்பட்டம்) என 740 பட்டங்களும் வியாபார முகாமைத்துவமாணி (வெளிவாரி) என 61 பட்டங்களும் இரண்டாம் நாளின் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் அமர்வுகளில் பட்டங்கள் உறுதி செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :