தென்கிழக்கு பல்கலையில் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான 4 ஆவது சர்வதேச ஆய்வு மாநாடு! (4th International Conference on Science and Technology - ICST2024)



லங்கை தென்கிழக்கு பல்கலைகழகத்தில் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான 4 ஆவது சர்வதேச ஆய்வு மாநாடு(4th International Conference on Science and Technology - ICST2024)  தொழில்நுட்பவியல் பீட பிரதான கேட்போர்கூடத்தில் 2024.10.16 ஆம் திகதி மாநாட்டின் தலைவரும் பதில் உபவேந்தரும் பீடாதிபதியுமான கலாநிதி யூ.எல். அப்துல் மஜீத் தலைமையில் இடம்பெற்றது.

ஆய்வு மாநாட்டை தென்கிழக்கு பல்கலைக்கழக  தொழிநுட்பவியல் பீடம் (Faculty of Technology) ஏற்பாடு செய்திருந்தது. இதனுடன் SLAAS ( Eastern Chapter) உம் ஒன்றிணைந்திருந்தது. 

மாநாட்டின் இணைப்பாளரும் பயோசிஸ்டம்ஸ் டெக்னாலஜியின் துறைத் தலைவருமான கலாநிதி முனீப் எம். முஸ்தபாவின் வழிகாட்டலிலும் ICST 2024 செயலாளர் ஏ.ஆர். பாத்திமா ஷபானாவின் நெறிப்படுத்தலிலும், “நிலையான எதிர்காலத்திற்கான நவீன தொழில்நுட்பங்கள் மூலம் புதுமையான எல்லைகளை ஆராய்தல்” (“Exploring Innovative Horizons Through Modern Technologies for a Sustainable Future”) எனும் தொனிப்பொருளில் குறித்த மாநாடு இடம்பெற்றது.

மாநாட்டுக்கு விஷேட பேச்சாளர்களாக பிரித்தானியாவின் Huddersfield பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டிலாந்தி அமரதுங்க மற்றும் தாய்லாந்தின் Asian Institute of Technology யின் உதவி பேராசிரியர் Chaklam Silpasuwanchai ஆகியோர் நிகழ்நிலையூடாக கலந்து கொண்டு உரையாற்றினர்.

ICST2024 ஆய்வு மாநாட்டுக்கு 81 ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டிருந்த போதும் 52 கட்டுரைகள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, விவாதிக்கப்பட்டன. நிகழ்வின் Technical Session ல் நேபாளம், பங்களாதேஷ் மற்றும் ஐக்கிய அமெரிக்காவில் இருந்து பல்வேறு ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

நிகழ்வுக்கு லைகா ஞானம் பௌண்டேசன் (Lyca Gnanam Foundation), MYOWN Education Aid  என்பன முழு அனுசரணை வழங்கியிருந்தன.

கலை கலாச்சார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி எம்.எம். பாஸில், முகாமைத்துவ வர்த்தக பீடத்தின் பீடாதிபதி ஏ.எம்.எம். முஸ்தபா, இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழி பீட பீடாதிபதி அஷ் செய்க் எம்.எச்.ஏ. முனாஸ், நூலகர் எம்.எம். றிபாவுடீன், பேராசிரியர் எம்.எச். தௌபீக், லைகா ஞானம் பௌண்டேசனின் அம்பாறை இணைப்பாளர் அகிலன் MYOWN Education Aid இன்
 பிரதிநிதிகள் திணைக்களங்களின் தலைவர்கள் விரிவுரையாளர்கள், நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள்  நிர்வாக உத்தியோகத்தர்கள் கல்விசாரா உத்தியோகத்தர்கள் ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்தோர் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

















































இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :