அக்கரைப்பற்று கிங்ஸ் கார்டன் வரவேற்ப்பு மண்டபத்தில் 2024.10.30 ஆம் திகதி மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே எஸ்.எம்.சபீஸ் மேற்படி கருத்துக்களை முன்வைத்தார்.
தேசியத்தில் பழமையான கல்விமுறை மற்றும் முறையற்ற அபிவிருத்தி நடைமுறை, போன்றவற்றாலும் மாவட்டத்தில் சிறந்த மக்கள் பிரதிநிதிகளின் பற்றாக்குறையினாலும் நாடும் பிராந்தியமும் அபிவிருத்தியிலும் சரி கல்வியிலும் சரி பின்னடைவில் இருக்கின்றது.
மறைந்த தலைவர் மர்ஹும் அஷ்ரப் அவர்கள், இந்த பிராந்தியத்திலுள்ள மக்களுக்கு அரசியலில் உள்ள அத்தனை சுழிவு நெளிவுகளையும் கற்றுத்தந்தார். அதனூடாக சிறுபான்மையினரும் அப்போதைய சிறு கட்சிகளும் பாராளுமன்றம் முதல் இப்போதுள்ள நாட்டை ஆளும் ஜனாதிபதிவரை உருவாக வழிபிறந்தது.அபிவிருத்திகளை செய்து காட்டினார் பல்கலைக்கழகம் முதல் துறைமுகத்தில் பாரிய அளவானோருக்கு வேலைவாய்ப்புக்கள் என நீண்டு சென்றது.
இந்த பிரதேசத்தில் அஷ்ரபுடன் அவைகள் எல்லாம் ஸ்தம்பித்து விட்டது. நாட்டையும் நமது பிரதேசத்தையும் மீண்டும் அபிவிருத்திப் பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும். அதற்கு எங்களுக்கு நல்ல பிரதிநிதிகள் தேவைப்படுகின்றனர்.
நான், நீண்ட காலமாக மக்கள் பணிகளில் ஈடுபட்டு வருகின்றேன். மாவட்டம் முழுவதும் எனது காலடிகளை பதித்துள்ளேன். மக்களை சந்தித்துள்ளேன். அவர்களிடம் எனது ஆதங்கங்களை கூறியுள்ளேன். அவைகளை நிறைவேற்ற ஒரு சந்தர்ப்பம் கேட்கிறேன். மக்கள் நிறைவேறாத உணர்ச்சிகளுக்கு மட்டும் கட்டுப்படாது, நாடுபற்றியும் பிராந்திய பிரதிநிதித்துவம், தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகளிடமுள்ள பிராந்தியம் சார்பான அறிவு பற்றியும் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்றார்.
நாட்டைச்சுற்றி கடல் இருக்கிறது ஆனால் நாங்கள் டின்மீனை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்கிறோம். எங்களிடம் நல்ல விளைச்சலைத் தரக்கூடிய நிலங்கள் இருக்கின்றது ஆனால மூன்று போகம் பயிர் செய்வது பற்றி யோசிப்பதில்லை. ஆடைகளை நெய்யக்கூடிய ஆற்றலுள்ளவர்கள் இருக்கின்றனர் அவற்றை நவீனத்துவத்துடன் இணைத்துக்கொள்ள வளிகாட்டலில்லை. இவைகள் பற்றியெல்லாம் யோசிக்கக் கூடியவர்களை நமது பிரதிநிதிகளாக அனுப்ப தவறியுள்ளோம் மக்கள் இவைகள் பற்றியும் சிந்தித்து தங்களது வாக்குகளை வழங்க வேண்டும்.
கல்வித்திட்டத்தை எடுத்துக்கொண்டால் பழமையான சில நாடுகளில் பரிச்சித்து தோற்றுப்போன திட்டமே; நடைமுறையில் உள்ளது. அது முழுமையாக மாற்றியமைக்கப்பட வேண்டும். கல்வித்திட்டத்தில் தொழில் ரீதியான கல்வித்திட்டம் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். அதற்காக கல்வி நிலையங்கள் உருவாக்கப்பட வேண்டும். அதனூடாக இளைஞர் யுவதிகள் துறைசார்ந்த பட்டங்களைப் பெற்று அவர்கள் உள்நாட்டு அபிவிருத்தியில் ஈடுபடகூடியவர்களாகவும் வெளிநாட்டு செலவானிகளை ஈட்டித் தரக்கூடியவர்களாகவும் மாற்றியமைக்கப்பட வேண்டும்.
இடம்பெறவுள்ள பொதுத்தேர்தலில் பலர் பல கட்சிகளின் ஊடாக போட்டியிடுகின்றனர். அவர்களில் சபீஸ் மக்களினதும் பிராந்தியத்தினதும் தேவைகளை நிறைவேற்ற பொருத்தமானவன் என கருதினால் எனக்கும் வாக்களியுங்கள் என்றார் திகாமடுல்ல மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் மயில் சின்னத்தில் இலக்கம் 10 இல் போட்டியிடும் எஸ். எம். சபீஸ்.
0 comments :
Post a Comment