பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான கால்பந்தாட்ட சுற்று போட்டியில் தென்கிழக்கு பல்கலைக்கழகம் வெற்றி வாகை சூடியது!



வுனியா பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான கால்பந்தாட்ட விளையாட்டுப் போட்டிகளில் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் அணி வெற்றிவாகை சூடி 2024 ஆம் ஆண்டின் சாம்பியனாக தெரிவாகியது.

2024 ஆம் ஆண்டின் கால்பந்தாட்ட விளையாட்டுப் போட்டிகளில் சாம்பியனான தென்கிழக்கு பல்கலைக்கழக விளையாட்டு வீரர்களை வரவேற்கும் நிகழ்வு பல்கலைக்கழக நிர்வாக கட்டிட முற்றலில் பதில் உபவேந்தர் கலாநிதி யூ.எல். அப்துல் மஜீட் தலைமையில் 2024.09.30 ஆம் திகதி இடம்பெற்றது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அணுசரனையுடனும்  அனைத்து பல்கலைக்கழக விளையாட்டு சங்கத்தின் ஏற்பாட்டிலும், 2024 ஆம் ஆண்டுக்கான போட்டிகள் இடம்பெற்றுவரும் வேளையில் கடந்த 27, 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் இடம்பெற்ற உதைபந்தாட்ட போட்டிகள் வவுனியா பல்கலைக்கழகத்தின் அனுசரணையுடன் இடம்பெற்றது.

போட்டிகளில் 14 பல்கலைக்கழகங்கள் பங்குகொண்டிருந்தன. இதில் தென்கிழக்கு பல்கலைக்கழக உடற்க்கல்வி பிரிவின் சிரேஷ்ட்ட போதனாசிரியர் எம்.எல்.ஏ. தாஹீர் தலைமையில் வீரர்கள் போட்டிகளில் பங்குகொண்டனர்.

இறுதிப்போட்டி சப்ரகமுவ பல்கலைக்கழகத்துக்கும் தென்கிழக்கு பல்கலைக்கழகத்துக்கும் இடையே இடம்பெற்றது. இதில் தென்கிழக்கு பல்கலைக்கழக அணி, 2024 ஆம் ஆண்டின் கால்பந்தாட்ட சாம்பியனாக தெரிவாகியது.

வீரர்களை வரவேற்கும் நிகழ்வில் கலை கலாச்சார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸில், முகாமைத்துவ வர்த்தக பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் ஏ.எம்.எம். முஸ்தபா மற்றும் பதில் பதிவாளர் எம்.ஐ. நௌபர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

கடந்த 2022 ஆம் ஆண்டில் நடாத்தப்பட்ட கால்பந்தாட்ட போட்டியிலும் தென்கிழக்கு பல்கலைக்கழகம் சம்பியனாகியது குறிப்பிடத்தக்கது.


















இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :