எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பாராளுமன்ற தேர்தல் வேட்பாளரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அம்பாறை மாவட்ட இளைஞர் அமைப்பாளர் றிஸ்லி முஸ்தபாவை ஆதரித்து ஆண், பெண்களுக்கான தெளிவூட்டல் கருத்தரங்கு அம்பாறை மாவட்டத்தில் கல்முனை ,இறக்காமம், நற்பிட்டிமுனை, பகுதிகளில் பிரச்சார நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.
இதன் போது நற்பிட்டிமுனை ,பாண்டிருப்பு சந்திகள் , கல்முனை சந்தை நகர வர்த்தக நிலையங்களுக்கு சென்ற பாராளுமன்ற தேர்தல் வேட்பாளரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அம்பாறை மாவட்ட இளைஞர் அமைப்பாளர் றிஸ்லி முஸ்தபா தனக்கு ஆதரவினை வழங்குமாறு பொதுமக்கள் வர்த்தகர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.
அரசியல்வாதிகள் பாராளுமன்ற உறுப்பினர்களாக அமைச்சர்களாக மக்களின் வாக்கு பலத்தால் தெரிவுசெய்யபட்ட பின்னர் தங்களின் கடமைகளை நேர்மையாகச் செய்வதில்லை. இந்த பிழையான போக்கை மாற்ற என்னால் முடிந்தளவு போராடுவதுடன் பாராளுமன்ற உறுப்பினர் பதவி, மற்றும் அமைச்சர் பதவிகளுக்கான வரப்பிரசாத வாய்ப்புக்களை முழுவதுமாக பெற்றுக்கொண்டு, தாம் சார்ந்த சமூகத்தினுடைய பிரச்சனைகள் என்னவென்று அறிந்திருந்தும், அவற்றுக்குரிய தீர்வினைக் காண எந்தவித ஆக்கபூர்வ நடவடிக்கையும் எடுக்காததன் விளைவுதான் இன்று நான் இத்தெர்தலில் போட்டி இட காரணம் என றிஸ்லி முஸ்தபா தெரிவித்தார்.
அத்துடன் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலிலும் இதே நிலைமைதான் ஏற்படபோகின்றது என நினைக்கிறேன். அரசியல்வாதிகள் மீது வெறுப்படைந்த மக்கள் மாற்றத்தையும், ஊழலற்ற அரசியலையும் எதிர்பார்த்தே 'தேசிய மக்கள் சக்தியை' ஆட்சியில் அமர்த்தி உள்ளார்கள்.இதன் மூலம் நாட்டிலே ஒரு புதிய அரசியல் கலாசாரம் உருவாகும் என்ற நம்பிக்கையும் ஏற்பட்டுள்ளது. அந்த நம்பிக்கைக்கு ஏற்றாற்போல் நானும் செயல்பட நினைப்பதோடு, எதிர்கால அரசியல் பயணத்தை நான் சார்ந்த சமூகத்துடன் இணைந்து செம்மையாகவும்இ உண்மையாகவும் நடாத்த உத்தேசித்துள்ளேன்
இதன் போது கட்சியின் பிரதேச முக்கிய உறுப்பினர்கள் பங்கேற்றிருந்தனர் .அத்துடன் மக்களை நேரடியாக சந்தித்து வீடு வீடாக பிரச்சாரப் பணிகளும் முன்னெடுக்கப்பட்டன.
0 comments :
Post a Comment