மூலதனச்சந்தை திறந்த வினா விடைப்போட்டிச் சமரில் தென்கிழக்கு பல்கலைக்கழக தொழில்நுட்பவியல் பீடம் வெற்றியீட்டியது!



ங்குப்பரிவர்த்தனை ஆணைக்குழு மற்றும் கொழும்பு பங்கு பரிவர்த்தனை(CSE) இணைந்து மூலதனச் சந்தை திறந்த போட்டிச் சமரினை நாடுதழுவிய ரீதியில் பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையே நடாத்தி வருகிறது. அந்த வகையில் இலங்கை தென்கிழக்கு பல்கலை கழகத்தில் 2024.10.15 ஆம் திகதி தென் கிழக்கு, கிழக்கு மற்றும் ஊவா வெல்லஸ்ச பல்கலைக்கழகஙகளுக்கிடையில் நடாத்தியது.

இடம்பெற்ற போட்டியின் முடிவில் தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்பவியல் பீடம் பேட்டிச் சமரில் முதலாம் இடத்தை பெற்று cluster - 01 வெற்றியாளராக தெரிவு செய்யப்பட்டு, ரூபா 100,000/- பணப்பரிசு மற்றும் சான்றிதழ்களையும் பெற்றுக்கொண்டதுடன் தேசிய மட்டத்தில் இடம்பெறவுள்ள போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பையும் பெற்றுக்கொண்டது.

அதேவேளை ஒவ்வொரு பல்கலைக்கழகத்தில் இருந்தும் மூன்று குழுவினர் தேசிய மட்டத்திற்கு தெரிவுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும். ஏனைய வெற்றியாளர்களுக்கான சான்றிதழ்களும் பிரதம அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டது.

தென்கிழக்கு பல்கலைக்கழக முகாமைத்துவ மற்றும் வர்த்தக பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி ஏ.எம்.எம். முஸ்தபாவின் தலைமையில், முகாமைத்துவ பீட நிதியியல் பிரிவு விரிவுரையாளர் எம்.சிறாஜின் ஒருங்கிணைப்பிலும் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு

பிரதம அதிதியாக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பதில் உப வேந்தர் கலாநிதி யூ. எல். அப்துல் மஜீத் மற்றும் இலங்கை பங்குபரிவர்த்தணை ஆணைக்குழு சார்பாக நிரோசன் விஜேசுந்தர ( சிரேஷ்ட உதவி தலைவர்- சந்தைப்படுத்தல் ,CSE) ஆகியோர் கலந்து கொண்டு போட்டியை ஆரம்பித்து வைத்து உரையாற்றினர்.

நிகழ்வின்போது சஞ்ஜீவனி பக்மதெனிய ( சிரேஷ்ட முகாமையாளர், மூலதன சந்தை, கல்வி விவகாரம், SEC ), நிமால் குமாரசிங்க முகாமையாளர் (வெளிவாரி தொடர்பு), சிவாநந்தன் முகாமையாளர், (மட்டக்களப்பு கிளை) ஆகியோருடன் தென்கிழக்கு பல்கலைக்கழக கலை கலாச்சார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி எம் .எம். பாஸில் மற்றும் பதில் பதிவாளர் எம்.ஐ. நௌபர், பதில் நிதியாளர் சி.எம். வன்னியாராச்சி, எம்.எஸ்.எம். பசில், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் கல்வி சார் மற்றும் கல்வி சாரா ஊழியர்கள், மாணவர்கள் ஆகியோரின் பங்குகொண்டிருந்தனர்.

இங்கு கருத்துத் தெரிவித்த பதில் உப வேந்தர் கலாநிதி யூ. எல். அப்துல் மஜீத், இலங்கை மூலதன சந்தையானது எமது நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் நிரந்தர அபிவிருத்தியின் முக்கிய உந்து சக்தியாக அமைவதுடன் , இன்றைய இளைஞர் சமூகம் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் மூலதன சந்தை தொடர்பான அறிவு , மற்றும் போட்டி சந்தை ஆய்வு தொடர்பான பல தகவல்களை வழங்குகின்றமை எமது தேசத்திற்கு ஆற்றுகின்ற மிக முக்கியமான பங்ககளிப்பாகும். அந்தவகையில் இலங்கை பங்குபரிவர்த்தனை ஆணைக்குழு (SEC) மற்றும் கொழும்பு பங்கு பரிவர்த்தனை(CSE) இணைந்து நடாத்தப்படும் திறந்த வினா விடை போட்டி சமர் நாடளாவிய ரீதியில் பல்கலைக்கழகங்களில் ரீதியில் நடாத்துவது தற்போதைய பொருளாதார நெருக்கடியில் எமது நாட்டின் மாணவர் சமுதாயத்தின் அறிவு, திறன் விருத்திக்கு மிக முக்கியமான பங்ககளிப்பாகும், என தெரிவித்தார்.

நிகழ்வின் அறிமுக உரையை கொழும்பு பங்கு பரிவர்த்தனை நிலையத்தின் சிரேஷ்ட உப தலைவர், நிரோசன் விஜேசுந்தர நிகழ்த்தினார். அவ் உரையில் பங்கு பரிவர்த்தனை நிலையம், இலங்கை பொருளாதாரத்தின் பங்களிப்பு மற்றும் போட்டி தொடர்பான விதிமுறை என்பன பற்றி விளக்கமளித்தார்.

அதனை தொடர்ந்து பல்கலைக்கழகஙகளுக்கிடையிலான மூலதனச்சந்தை திறந்த போட்டிச் சமர் Cluster - 01 இடம்பெற்றது.

இந் நிகழ்வில் தென் கிழக்கு, கிழக்கு மற்றும் ஊவா வெல்லஸ்ச பல்கலைக்கழகங்களின் பல்வேறு பீடங்களின் 31 குழுக்களுக்கிடையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இப்போட்டியானது மாணவர்களுக்கிடையில் மூலதனச் சந்தை தொடர்பான அறிவு அத்தோடு நிதி, பொருளாதாரம், பொழுது போக்கு, விளையாட்டு ரீதியான அறிவினை மேம்படுத்தவும், விருத்தி செய்யவும் இத் திறந்தபோட்டி பிரதான பங்குவகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. இறுதியாக நன்றி உரை முகாமைத்துவ பீடத்தின் விரிவுரையாளர் எம். சிராஜ் நிகழ்த்தினார்.


























 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :