நேற்று (2024.10.27) அட்டாளைச்சேனையில் எஸ் எம் சபீஸ் அவர்களின் மகளிர் கருத்தரங்கு ஒன்று நடைபெற்றிருந்தது. அந்த வீட்டில் பொலிசாரும் தேர்தல் திணைக்கள அதிகாரிகளும் அத்துமீறி பரிசோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அதனால் வீட்டு உரிமையாளரான பெண் ஒருத்தர் சட்டத்தைமீறி பெண் அதிகாரிகள் இல்லாமல் தனது வீட்டுக்குள் பரிசோதனை இடவந்தமை மனித உரிமை அத்துமீறலாகும் என்றும் அதிகாரிகள் பக்கச்சார்பாக நடந்து கொண்டமை சட்டத்துக்கு முரணானதாகும் எனவும் கூறி மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.
மயில் சின்னம் 10ம் இலக்கத்தில் அக்கரைப்பற்று அனைத்துப்பள்ளிவாசல் சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் எஸ் எம் சபீஸ் போட்டியிடுகின்றார்.
அவர் கலந்துகொள்ளும் எல்லாக்கருத்தரங்குகளிலும் பொலிசாரும் தேர்தல் திணைக்கள அதிகாரிகளும் பொய்யான குற்றச்சாட்டுக்களோடு பின்தொடர்ந்து இடைஞ்சல் கொடுத்துக்கொண்டே வருகின்றமை இங்கே குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment