காரைதீவில் களைகட்டிய மாதர் உற்பத்தி பொருட்களின் கண்காட்சி





வி.ரி.சகாதேவராஜா-

தொழில் முயற்சிகளுக்கு பெண்களை வலுவூட்டல்.
எனும் தொனிப்பொருளின் கீழ், மாதர் உற்பத்தி செய்த பொருட்களின் கண்காட்சியும் விற்பனையும் காரைதீவில் இடம் பெற்றது.

காரைதீவுப் பிரதேச செயலாளர் கோ.அருணனின் தலைமையில் நிகழ்வு நேற்று முன்தினம் சனிக்கிழமை இடம்பெற்றது.

பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சிவஞானம் ஜெகராஜன் கலந்து சிறப்பித்தார்.

அங்கு மாதர் அபிவிருத்திப் பயிற்சி நிலையத்தினரால் உற்பத்தி செய்த பொருட்களை காட்சிப் படுத்தி, விற்பனையும் செய்யப்பட்டது .

இதன் போது காரைதீவு பிரதேச மாதர் சங்கங்களினால் முன்னாள் பிரதேச செயலாளரும் தற்போதைய மாவட்ட மேலதிக அரசாங்க அதிபருமான சிவ.ஜெகராஜன் மற்றும் சிறப்பாக பயிற்சிகளைமுடித்த மாணவர்கள் அதன் ஆசிரியர் மற்றும் மாதர் அபிவிருத்தி சங்க தலைவர், செயலாளர் மற்றும் பொருளாளர்கள் கௌரவப்படுத்தி பாராட்டப்பட்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :