சென்னை எருக்கஞ்சேரியில் ,ஊடகவியலாளரும்,சமூக சேவைகியுமான மாவனல்லை பாரா தாஹீர் கௌரவிக்கப்பட்டார்.



அஷ்ரப் ஏ சமத்-
சென்னை எருக்கஞ்சேரியில் 27/10/2024 அன்று தமிழ் தொண்டன் பைந்தமிழ்ச் சங்கம் மற்றும் நிலா வட்டம் இலக்கிய அமைப்புகள் இணைந்து நடாத்திய கவிஞர் ஜாகிர் உஷேன் அவர்களின் இரட்டை நோபல் உலக சாதனை விழாவில் ஐயாயிரம் மழலைப் பாடல்களைக் ஒரே நூலாக வெளியிடும் நிகழ்வு தனது ஐம்பது மழலைப் பாடல்களையும் இணைத்து பங்களிப்பு தனது ஐம்பது மழலைப் பாடல்களையும் இணைத்து பங்களிப்பு செய்தமைக்காக எழுத்தாளரும்,கவிஞரும் ,ஊடகவியலாளரும்,சமூக சேவைகியுமான மாவனல்லை பாரா தாஹீர் அவர்கள் "தமிழ் நேசன்", கவிச் சுடர்,கவித் தென்றல் ஆகிய பட்டங்கள் வழங்கி,விருது வழங்கி ,உலக சாதனையாளர் நற் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

ஐயாயிரம் மழலைப் பாடல்கள் அடங்கிய "கவித்தேன் தூளி "நூலில் இவரது"சின்னஞ் சிறு தாரகைகள்"எனும் தலைப்பிலான ஐம்பது மழலைப் பாடல்கள் உள்வாங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.இந்தியா,இலங்கை,மலேசியா,சிங்கப்பூர் கவிஞர்கள் பங்கு பற்றிய இவ் நிகழ்வில், இவருக்கான உலக சாதனை விருதுகள் வட சென்னையிலுள்ள வீ.ஏ.எம். மஹால் எனும் அரங்கில் வைத்து வழங்கப்பட்டது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :