கல்முனை கல்வி வலயத்தின் சாய்ந்தமருது கோட்டத்திற்கு உட்பட்ட சாய்ந்தமருது அல்ஹிலால் வித்தியாலயத்தின் சர்வதேச சிறுவர் தினம் மிக விமரிசையாக பாடசாலையின் அதிபர் யூ.எல்.நஸார் தலைமையில் நடைபெற்றது.
"பிள்ளைகளை பாதுகாப்போம் சமமாக மதிப்போம்" எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற இந்நிகழ்வில், மாணவர்கள் அனைவருக்கும் பாடசாலைக் குழாத்தினரால் மாலை அணிவித்து இனிப்பு வழங்கி வரவேற்கப்பட்டதோடு, வகுப்பறைகளில் சிறுவர் தினம் தொடர்பாக பல்வேறு கலை நிகழ்வுகளும் நடந்தேறின.
இறுதியாக மாணவர்களுக்கு உலர் உணவுப் பொதிகளும், சிறுவர் தின நினைவுப் பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment