தேர்தலில் இருந்து விலகி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷாரபோடு இணைந்து பயணிப்பதாக
கடந்த இரு தினங்களாக தகவலொன்று பரப்பப்பட்டு வரும் செய்திகளில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லையென சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் திகாமடுல்ல தேர்தல் மாவட்ட பொத்துவில் தொகுதி வேட்பாளரும் பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான எம்.எஸ்.அப்துல் வாசித் தெரிவித்தார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
சகோதரர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஷாரபின் வெற்றி வாய்ப்புக்கள் மிகக் குறைவாகவே உள்ளது.
அதனால், அம்பாறை மாவட்ட முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொள்வதற்காக அவரின் ஆதரவினை வழங்குமாறு கூறியிருந்தேனே தவிர, தேர்தலில் இருந்து விலகி விட்டுக்கொடுப்பதாகவோ அல்லது முஷாரப்போடு இணைந்து பயனிப்பதாகவோ ஒருபோதும் யாரிடமும் கூறவில்லை.
இம்முறை தேர்தலில் வெற்றிபெருவதற்கான சகல வாய்ப்புக்களும் எனக்குள்ளது என்பதைப் பற்றி அவருக்கு மிகத் தெளிவாக தெளிபடுத்தியுள்ளேன்.
அது மாத்திரமல்லாது கட்சித் தலைமையினால் எங்களுக்கு வாக்குறுதியளிக்கப்பட்ட தேசியப்பட்டியல் பிரதிநிதித்துவம் பற்றியும் தெளிவுபடுத்தினேன்.
இம்முறை நாடாளுமன்றம் செல்வதற்கான சகல வாய்ப்புக்களும் எனக்குள்ளது. அதற்கான ஆதரவுகளை முழுமையாக வழங்குவதற்கு பொத்துவில் மக்களும், பொத்துவில் தொகுதி மக்களும் முன்னின்று செயற்படுகின்றனர்.
இதை சகித்துக்கொள்ள முடியாத சிலரினால் இந்த போலியான வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. அதை யாரும் ஏற்றுக்கொள்ள வேண்டாம் என்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் திகாமடுல்ல மாவட்ட பொத்துவில் தொகுதி வேட்பாளர் எம்.எஸ்.அப்துல் வாசித் ஆதரவாளர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
0 comments :
Post a Comment