காயன்குடா விவசாய போதனாசிரியர் பிரிவில் நெற் செய்கையில் உற்பத்தி திறனை அதிகரித்தல் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு



ஏறாவூர்நிருபர் சாதிக் அகமட்-
ன்று மட்டக்களப்பு மாவட்ட விவசாய பிரதி பணிப்பாளர் M. பரமேஸ்வரன் அவர்களின் வழிகாட்டலில் காயன் குடா விவசாய போதனாசிரியர் பிரிவில் நெற் செய்கையில் உற்பத்தி திறனை அதிகரித்தல் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு காமன் குடா விவசாய போதனாசிரியர் K.லிங்கேஸ்வரன் தலைமையில் ஏறாவூரைச் சேர்ந்த சாலி ஹாஜியார் அவர்களின் வயல் நிலத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட விவசாய பிரதி பணிப்பாளர் M.பரமேஸ்வரன் , மட்டக்களப்பு வடக்கு வலய விவசாய உதவி பணிப்பாளர் IL. பௌசுல் அமீன், வடக்கு வலய விவசாய போதனாசிரியர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள், திணைக்கள தொழிலாளிகள் மற்றும் முன்னோடி விவசாயிகளும் கலர்ந்து சிறப்பித்தனர்.


விவசாய பிரதி பணிப்பாளர் M. பரமேஸ்வரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்;

இவ்வாறான ஒருங்கிணைந்த விழிப்புணர்வு கருத்தரங்குகள் விவசாயிகளிடையே இலகுவாக புதிய தொழில் நுட்பங்களை புகுத்துவதற்கான இலகு சாதனமாக உள்ளதுடன் இந்நிகழ்வுக்கு எமது திணைக்களத்தின் மூலம் PSDG திட்டத்தின் மூலமாக என்னால் பத்தலகொட நெல் ஆராய்ச்சி நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட விவசாயிகளுக்கான கள சுற்றுலாவே அடிகோலியுள்ளது எனவும் தெரிவித்தார். இந்நிகழ்வானது நெற் செய்கையில் நிலப் பண்படுத்தலில் சட்டிக் கலப்பை பாவனையும் விளைச்சலில் அதன் பங்களிப்பும் , களைக் கட்டுப்பாடு, நீர் முகாமைத்துவம், நெல் நாற்று நடுகை இயந்திரம் மூலம் நெல் நாற்று நடுகையும் அதன் அனுகூலங்களும், பசளை பாவனை முறை மற்றும் அதன் முக்கியத்துவம்,நோய் , பீடை முகாமைத்துவம், அறுவடை என அனைத்து விவசாய நடைமுறைகளும் விவசாயிகளுக்கு செயன்முறை மற்றும் பயிற்சி மூலம் தெளிவுபடுத்தப்படுவதாகவும் கூறியதோடு இவ்வாறான ஆர்வமுள்ள விவசாயிகள் தங்களது வயல் நிலங்களிலும் வழமை போன்று வீசி விதைத்தலை மாத்திரம் மேற்கொள்ளாமல் நெல் நாற்று இயந்திரம் மூலம் நாற்று நடுகை முறை, பரசூட் முறை ,நெல் விதையிடு கருவி மூலம் நெற் பயிரினை ஸ்தாபிப்பதன் மூலம் நெற் பயிர்ச் செய்கையில் அதிகளவான விளைச்சலை பெற முடியும் எனவும் தெரிவித்தார்.















இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :