பாராளுமன்ற வேட்பாளரின் ஆதரவாளரது கடை அடித்து நொறுக்கப்பட்டுள்ளது-அம்பாறை மாவட்டத்தில் சம்பவம்



பாறுக் ஷிஹான்-
னந்தெரியாதோரினால் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் ஒன்றில் பாராளுமன்ற வேட்பாளரின் ஆதரவாளரது கடை அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாண்டிருப்பு தாளவட்டுவான் பிரதான வீதியில் அமைந்துள்ள தற்காலிக கடை ஒன்றே இவ்வாறு அடித்து உடைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (27) இரவு இடம்பெற்றுள்ளதுடன் குறித்த கடை உரிமையாளர் அம்பாறை மாவட்டம் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சார்பாக சங்கு சின்னத்தில் இலக்கம் 5 இல் போட்டியிடும் வேட்பாளர் வைத்தியர் பிரகாஸின் ஆதரவாளரது கடையே அடித்து உடைக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு குறித்த வேட்பாளர் சென்று சேதமடைந்த கடையை பார்வையிட்டதுடன் தாக்குதல் சம்பவம் தொடர்பில் பெரிய நீலாவணை பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறைப்பாடு அளிக்க ஆதரவாளருடன் சென்றுள்ளார்.

இதன் போது பொலிஸ் நிலையத்தில் குறித்த முறைப்பாடு ஏற்றுக்கொள்ளாமையின் காரணமாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவிடம் இன்று முறைப்பாடு செய்ய எண்ணியுள்ளதாக பாதிக்கப்பட்ட கடை உரிமையாளர் ஊடகங்களிடம் குறிப்பிட்டார்.

மேலும் குறித்த கடையில் அரசியல் விடயங்களை தாங்கள் உரையாடுவதாகவும் இதனால் இக்கடை உடைப்பு ஏனைய தரப்புகளால் உடைக்கப்பட்டிருக்க கூடும் என வேட்பாளர் வைத்தியர் பிரகாஸ் தெரிவித்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :