உழைக்கும் மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் : மக்கள் காங்கிரஸ் அமைப்பாளர் எஸ்.எம். சபீஸ்



ழை மக்கள் அயராது உழைத்தும் வாழ்கையில் முன்னேற முடியவில்லை என்றால் அதற்கு காரணம் எம்மை ஆட்சி செய்தவர்களினதும் எமக்கு தலைமை கொடுத்தவர்களினதும் தவறாகும். நாட்டை உற்பத்தி பொருளாதார முறைக்கு மாற்றுவோம் அதன் மூலம் ஏழை மக்களின் வாழ்வில் விரைவில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவோம் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினரும், அக்கரைப்பற்று அமைப்பாளருமான எஸ்.எம் சபீஸ் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்ட பல்வேறுபட்ட கிராமங்களில் மக்களை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடும்போதே இதனைத் தெரிவித்திருந்தார். தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர்,

21 வயதுக்குள் அடிப்படை (3S) தகுதிடைய அனைத்து மாணவர்களும் பட்டப்படிப்பினை பெறுவதற்கு வழி அமைக்க வேண்டும். உற்பத்தி பொருளாதாரம், முயற்சியாண்மை, கடல்சார் நீரியல் வளங்கள், மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகியவற்றுடன் இணைந்ததான திட்டங்களை உருவாக்க வேண்டும். கிழக்கு மாகாணத்தின் வளங்களை மையப்படுத்தி புதிய தொழிற்சாலைகளை உருவாக்குதல், மாவட்ட வளங்களை பயன்படுத்தும் விதமாக கைத்தொழில் பேட்டைகள் உருவாக்குதல். வேளாண்மை பயிர் செய்கையை இரண்டிலிருந்து மூன்று போகமாக மாற்றுவதற்கு உரிய திட்டங்களை செயற்படுத்தல் போன்ற பல திட்டங்களை முன்னெடுக்க தயாராக இருக்கிறோம்.

மேலும் கிழக்கு மாகாணத்தில் காணப்படும் நிர்வாக பயங்கரவாதம் மற்றும் காணி பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு பெற்றுத்தரல், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் மருத்துவம், சட்ட மற்றும் கல்வி பீடத்தினை ஆரம்பித்தல், அனைத்து மாவட்டத்தின் மத்திய பகுதியில் அமைய கூடியவாறு மக்களுடன் தேவையுடைய அரசாங்க காரியாலயங்களான ஆட்பதிவு திணைக்கள காரியாலயம், குடிவரவு குடியகல்வு திணைக்கள காரியாலயம், சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் காரியாலயம் போன்றவற்றை நிறுவ நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது.

இலங்கையின் சுற்றுலாத்துறை கேந்திர நிலையங்களாக இருக்கின்ற அறுகம்பே மற்றும் பாசிக்குடா ஆகிய இடங்களை வெளிநாட்டு உள்நாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அபிவிருத்தி செய்தல். போன்ற பல்வேறு வகையான வேலைத்திட்டங்களை செய்ய எண்ணியுள்ளதாக இங்கு உரையாற்றிய சபீஸ் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :