இது பற்றி அவர் தெரிவித்துள்ளதாவது,
ஐக்கிய காங்கிரஸ் கட்சி எனும் பெயரில் இயங்கி வந்த எமது கட்சியை நாம் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு சில கோடி ரூபாய்க்கு விற்றதாக சில கூழ் முட்டைகள் எழுதுகின்றனர்.
ஒரு வீட்டை விற்றால் அந்த வீட்டின் சொந்தக்காரன் அதில் குடி இருக்க முடியுமா? என்பது கூட புரியாத கூழ் முட்டைகள். எமது கட்சியில் நான் அவைத்தலைவராக Chairman உள்ளேன்.
எமது கட்சியின் தலைமை ஏற்கும்படி நான் ஹிஸ்புல்லாவிடம் சொன்னேன். அதே போல் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான ஹரீஸ், முஷர்ரபையும் தலைவர் பதவியை ஏற்க அழைத்தேன். அவர்கள் என் அழைப்பை அலட்சியம் செய்தனர்.
இந்த நிலையில் எமது கட்சியை முன் கொண்டு செல்ல அரசியல் அறிவும் பாராளுமன்ற அனுபவமும் உள்ள ஒருவர் கிடைத்த போது அவரை கட்சியின் தலைவராக்கியுள்ளோம்.
அத்துடன் கட்சியை விற்றமைக்கு கல்முனையை சேர்ந்த ஒரு பிரபல அரசியல்வாதி புறோக்கர் என இந்த கூழ் முட்டைகள் நொந்து போய் கிடக்கும் ஹரீசை மறைமுகமாக குற்றம் சாட்டியுள்ளனர்.
நானும் ஹரீசும் நேரடியாக பேசி ஒரு வருடத்துக்கு மேலாகிவிட்டது. அத்துடன் எனக்கும் ஹரீசுக்கும் பல விடயங்களில் 7ம் பொருத்தம். பாவம் அவரையும் இழுத்துவிட்டிருப்பது அநியாயமாகும்.
இத்தகைய வதந்திகளுக்கு காரணம் எனது கட்சியின் பிரதி தலைவராக இருந்த ஒருவர் தான்தான் கட்சித்தலைவன் என பேஸ்புக்குகளில் பொய்யாக எழுதியபோது அவருக்கெதிராக நான் நடவடிக்கை எடுத்த போது அவர் என்னைப்பற்றி இவ்வாறாக கட்சியை விற்றதாக பொய்யாக பேஸ்புக்குகளில் எழுதினார். அந்த வாந்தியைத்தான் இந்த கூழ் முட்டைகள் விழுங்கியுள்ளனர்.
தற்போது எமது கட்சியின் தலைவராக முன்னாள் பாராளுன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். அவர் கட்சியை நன்றாக செயற்படுத்துகிறார்.
அத்துடன் கட்சியை அனைத்து இன மக்களிடமும் கொண்டு செல்வதற்காக புதிய சின்னமாக மைக் சின்னத்தை கொண்டு வந்துள்ளோம்.
இத்தேர்தலில் எமது ஐக்கிய ஜனநாயக குரல் கட்சிக்கு நிச்சயம் பாராளுமன்ற உறுப்பினர் பதவி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
எமது கட்சி இம்முறை கம்பஹா, கொழும்பு, களுத்துறை, காலி, நுவரெலியா, பதுளை, மாத்தளை, பொலன்னறுவை, புத்தளம் ஆகிய மாவட்டங்களில் கட்சியின் மைக் சின்னத்திலும் ஏனைய மாவட்டங்களில் வேறு கட்சிகளுடன் கூட்டணியாகவும் போட்டியிடுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment