கல்முனை மாநகர சபை பட்ஜெட்டுக்கு முன்மொழிவுகள் எதிர்பார்ப்பு



அஸ்லம் எஸ்.மெளலானா-
ல்முனை மாநகர சபையின் 2025ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்திற்கு பொது மக்களிடம் இருந்து ஆக்கபூர்வமான முன்மொழிவுகள் எதிர்பார்க்கப்படுவதாக மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ் அறிவித்துள்ளார்.

இதன் பிரகாரம் பொது நல அமைப்புகள் மற்றும் பொது மக்கள் எவராயினும் தமது முன்மொழிவுகளை எதிர்வரும் 2024.10.28 ஆம் திகதிக்கு முன்னதாக எழுத்து மூலம் சமர்ப்பிக்க முடியும் எனவும் அதன் பின்னர் சமர்ப்பிக்கப்படும் முன்மொழிவுகள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கல்முனை மாநகர சபையின் அடுத்த ஆண்டுக்கான பட்ஜெட்டை தயாரிப்பதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன

இந்நிலையில், மக்களினதும் பொது அமைப்புகளினதும் ஆலோசனைகள் மற்றும் கருத்துகளை உள்வாங்கி சிறந்ததொரு சாத்தியப்பாடான பட்ஜெட்டை தயாரித்து, மாநகர சபையை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும் என்ற உயரிய நோக்கை அடிப்படையாகக் கொண்டு இவ்வாறு முன்மொழிவுகள் கோரப்படுவதாக ஆணையாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :