கிழக்கில் ஐந்து பிரதிநிதிகளை பெறுவோம் !. ஊடக சந்திப்பில் த.ம.வி.புலிகள் முதன்மை வேட்பாளர் சர்வானந்தன் சூளுரை



வி.ரி. சகாதேவராஜா-
மது தலைவர் பிள்ளையான் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி கிழக்கு மாகாணத்தில் இம் முறை 5 பாராளுமன்ற உறுப்பினர்களை நிச்சயமாக பெறும்.இதில் சந்தேகமேயில்லை.

இவ்வாறு தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் அம்பாறை மாவட்ட முதன்மை வேட்பாளர் பொறியியலாளர் தேவராஜன் சர்வானந்தன் தெரிவித்தார்.
காரைதீவில் அமைந்துள்ள அம்பாறை ஊடக மையத்தில் நேற்று(29) இவ் ஊடகச் சந்திப்பு இடம் பெற்றது.

அதன் போது அவர் மேலும் தெரிவித்ததாவது ..

பேரினவாத கட்சிகளை விட தமிழ்க் கட்சியே எமது தெரிவாக இருக்க வேண்டும். அதிலும் கிழக்கு தலைமையைக் கொண்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தான் எங்களுக்கு உரிய ஒரே தெரிவு. எமது தலைவர் பிள்ளையான் மிகவும் ஆளுமையானவர் . எமக்கு உறுதுணையாக இருப்பார்.
இதை உணராவிட்டால் கிழக்கு மக்கள் தலையில் மண்ணை அள்ளிப்போட்ட நிலைமைதான் உருவாகும் .
எனது கட்சியின் தலைவர் ஆளுமை மிக்கவர். இம்முறை அம்பாறை திருகோணமலை போன்ற பகுதிகளிலும் போட்டியிடுகின்றோம். நிச்சயம் நான் இங்கு வெற்றி அடைவேன்.

சில தமிழ்க் கட்சிகள் சீசனுக்கு வந்து செல்லும் கட்சியாக இருக்கின்றது. அவர்களை நம்ப வேண்டாம். எனது பிறந்த தேதியே வேட்பாளர் இலக்கமாக வந்திருக்கிறது. அதில் எனக்கு சந்தோஷம்.
எமது கட்சியில் கிழக்கு மாகாணத்தில் 25 பேர் போட்டியிடுகிறார்கள் அதில் நாங்கள் ஐந்து பேர் கட்டாயம் வெற்றி அடைவோம்.
எனது தேர்தல் விஞ்ஞானம் இதுதான்.

கொள்கை பிரகடனம்

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் திகாமடுள்ள (அம்பாறை) மாவட்டத்தில் கல்முனை தொகுதி சார்பாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி படகுச் சின்னத்தில் 5 ஆம் இலக்கத்தில் நான் போட்டியிடுகிறேன்.

எனது கொள்கைப் பிரகடனமானது பின்வருமாறு...

1) கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் அதிகாரங்களை பூரணப்படுத்துதல்.

2) கல்முனை மற்றும் சம்மாந்துறை வலயங்களில் உள்ள தமிழ்ப்பாடசாலைகளை ஒன்று சேர்த்து புதிய கல்வி வலயம் ஒன்றை அமைத்தல்.

3)கல்முனையில் தமிழர்களின் கலை, கலாச்சாரம், பண்பாடு, விழுமியங்களை மேலும் வளரச்செய்வதற்கு கலாச்சார மண்டபம் ஒன்றினை அமைத்தல்.

4)அம்பாறை மாவட்டத்தில் உள்ள தமிழ்ப் பிரதேசங்களில் இயங்கும் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களினை, கட்டுமானத்திலும், நிதி வளத்திலும், மனித வளத்திலும் மேலோங்கச் செய்தல்.

5) கல்முனையில் கல்முனை வடக்கு வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலையாக தரம் உயர்த்துதல். அதற்குத் தேவையான கட்டுமானங்களையும், மனித வளத்தையும், அதி விசேட சிகிச்சை நிபுணர்களையும் கொண்ட சிறந்த வைத்தியசாலையாக உருவாக்குதல். மற்றும் திருக்கோவில் வைத்தியசாலையை கல்முனை வைத்தியசாலையின் தற்போதைய தரத்திற்கு தரம் உயர்த்துதல்.

6) அம்பாறை மாவட்டத்தில் காணப்படும் தமிழ் பிரதேச செயலகங்கள் , பிரதேச சபைகளுக்கு உட்பட்ட பிரதேசங்களில் உள்ள பாதைகள், வீதிகள் , வடிகான்களை புனரமைத்தலும் மீள் நிர்மாணம் செய்தலும், மற்றும் வீதி விளக்குகளை நிர்மாணித்தலும்.

7) கல்முனை , பாண்டிருப்பு பிரதேசத்தில் பிரசித்தி பெற்ற திரௌபதை அம்மன் ஆலயம் , திருக்கோவிலில் பிரசித்தி பெற்ற சித்திர வேலாயுதர் முருகன் ஆலயம்
மற்றும் வீரமுனையில் பிரசித்தி பெற்ற சிந்தயாத்திரை பிள்ளையார் ஆலயம் போன்றவற்றிக்கான அலங்கார வளைவுகளை பெரும்வீதியில் அமைத்தல் .

8) தமிழர் பிரதேசங்களில் உள்ள விவசாயக் காணிகளுக்கான குளங்களை புனரமைத்து கொடுத்தல்.

9) அம்பாறை மாவட்டத்தில் கல்முனை, நாவிதன்வெளி, சம்மாந்துறை, திருக்கோவில், தம்பிலுவில்,பொத்துவில் மற்றும் ஆலையடி வேம்பு போன்ற பிரதேசங்களில் உள்ள பெரும்பாலான இளைஞர் யுவதிகளுக்கு தொழில்வாய்ப்புகளை அமைத்து கொடுத்தல்.

10) எமது அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த பட்டதாரிகள் பட்டப்படிப்பின் பின்பு அகில இலங்கை சேவைகளுக்குள் உள்வாங்கப்படுவதற்கான பயிற்சி நெறிகளை வழங்கும் முகமாக அதற்குரிய பூரண கல்வி நிலையம் ஒன்றை உருவாக்குதல்.

11) சாதாரண தர மற்றும் உயர் தர கற்கையிலிருந்து இடை விலகும் மாணவர்களுக்காக கட்டிட நிர்மாண துறையில் பயிற்சிகளை வழங்கும் நிலையங்களை அமைத்து வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்கு தயார்படுத்தல்.

12) தமிழர்கள் பயன்படுத்திய பாரம்பரிய வயற்காணிகள், அரச காணிகளை மீளகையகப்படுத்தல்.

13) கல்முனை மாநகர சபையின் எல்லைக்குள் உள்ள நகரில் வசிப்பவர்களோ அல்லது இந் நகரில் பிறந்தவர்களோ கல்முனைப் பிரதேச அரச திணைக்களங்களில் அல்லது நிறுவனங்களில் நிறைவேற்றுத் தரத்திலும் தலைமைப்பதவியிலும் நேர்மையுடன் வெளிப்படைத் தன்மையுடனும் இருப்பதினை உறுதிப்படுத்துதல்.

14) அம்பாறை மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்களான கல்முனை, நாவிதன்வெளி, காரைதீவு, சம்மாந்துறை, ஆலையடிவேம்பு, திருக்கோவில், பொத்துவில் ஆகிய பிரதேசங்களில் E-Library ஐ அமைத்தல் வேண்டும்.

15) நன்னீர் மீன்பிடி மற்றும் ஆழ்கடல் மீன்பிடிகளை அபிவிருத்தி செய்தலும் நவீனமயப்படுத்தலும்.
16) அம்பாறை மாவட்ட தமிழ்க்கிராமங்களின் கடற்கரையோரங்களில் வசிக்கும் மக்களையும் அவர்களுடைய நிலத்தையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
17) அம்பாறை மாவட்டத்தின் தமிழ்க்கிராமங்களில் சுற்றாடலின் சுகாதாரத்தை பேணுவதோடு சுற்றுலாத் துறையை விருத்தி செய்து அதன் மூலம் வருமானம் பெறல்.

18) வீரமுனை தொடக்கம் துறைநீலாவணை வரையான கிட்டங்கி வாவியை சுற்றுலாத் துறையில் மேம்பட அபிவிருத்தி செய்தல்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :