நள்ளிரவில் கோரக்கர் தமிழ் மகா வித்தியாலயத்தினுள் புகுந்து யானை அட்டகாசம்.



வி.ரி. சகாதேவராஜா-
ம்மாந்துறை வலயத்திற்குட்பட்ட கோரக்கர் தமிழ் மகா வித்தியாலயம்
யானைத்தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது.

இச்சம்பவம் நேற்று (02) நள்ளிரவில் இடம்பெற்றுள்ளது.

நடுநிசியில் பாடசாலை வளாகத்தினுள் பின்பக்க மதிலை உடைத்து கொண்டு புகுந்த யானை அங்கு சில நிமிடங்கள் அட்டகாசம் செய்தது. பின்னர் செல்லும் போது மற்றுமோர் மதிலை உடைத்து வெளியேறியது.

இதுதொடர்பாக பாடசாலை அதிபர் எஸ்.இளங்கோபன் ஊடகங்களுக்கு கூறுகையில்:
நேற்று நடுநிசியில் யானைகள் எமது பாடசாலையின் பின்பக்கத்தால் புகுந்து இந்த அட்டுழியத்தைச் செய்துள்ளது.

நான் அதிகாலையில் இங்கு வந்துபார்த்தேன். இவை சேதமடைந்துள்ளன.
வலயக்கல்விப் பணிப்பாளர் கிராம சேவையாளர் பிரதேச செயலாளர் பொலிசார் போன்ற தரப்புக்கு முறைப்பாடு செய்துள்ளேன்.

அரசாங்கம் பாதுகாப்பை ஏற்படுத்துவதுடன் நட்டஈட்டையும் தர
நடவடிக்கைஎடுக்கவேண்டும். என்றார்.
யானைகளால் வேளாண்மை அறுவடை முடிந்த பின்னர் அடிக்கடி இவ்வாறு சேதமேற்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :