அல்கஹோல், புகையிலை மற்றும் பிற போதைப்பொருள் தடுப்பு பற்றிய சமூக அதிகாரம் குறித்த குறுகிய கால கற்கையை பூர்த்தி செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு!



தென்கிழக்கு பல்கலைக்கழக கலை கலாச்சார பீடத்தின் சமூகவியல் துறை மற்றும் ADIC எனப்படும் அல்கஹோல் மற்றும் போதைப்பொருள் தகவல் மத்திய நிலையமும் இணைந்து நடாத்திய அல்கஹோல், புகையிலை மற்றும் பிற போதைப்பொருள் தடுப்பு பற்றிய சமூக அதிகாரம் குறித்த குறுகிய கால கற்கையை பூர்த்தி செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 2024.10.10 ஆம் திகதி பீடத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

கலை கலாச்சார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி எம்.எம். பாஸிலின் தலைமையிலும் கற்கையின் இணைப்பாளரும் சமூகவியல் துறையின் தலைவருமான பேராசிரியர் கலாநிதி எஸ்.எம். ஐயூப் வழிகாட்டலிலும் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு பதில் உபவேந்தர் கலாநிதி யூ.எல். அப்துல் மஜீத் நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய அதேவேளை சான்றிதழ்களையும் வழங்கி வைத்தார்.

கலை கலாச்சார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி எம்.எம். பாஸில், அல்கஹோல், புகையிலை மற்றும் பிற போதைப்பொருள்களின் பவனை பிராந்திய ரீதியாகவும் தேசிய மற்றும் சர்வதேச ரீதியாகவும் வியாபித்துள்ளதாகவும் போதைப்பொருட்களின் பாவனை உடனடியாக கட்டுப்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துக்கூறி உரையாற்றினார்.

அல்கஹோல் மற்றும் போதைப்பொருள் தகவல் மத்திய நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சம்பத் டி சேரம் உரையாற்றும்போது இலங்கையில் போதைப்பொருட்களை பாவிப்போரின் வீதாசாரங்களை எடுத்துக்கூறியதுடன் இதன் காரணமாக நாடு எதிர்கொண்டுள்ள அபாய சூழலையும் குறிப்பிட்டார்.

நிகழ்வின் போது ADIC எனப்படும் அல்கஹோல் மற்றும் போதைப்பொருள் தகவல் மத்திய நிலையத்தின் சிரேஷ்ட திட்ட உத்தியோகத்தர் ஏ.சி.றஹீம் கற்கைநெறி தொடர்பில் விளக்கமளித்தார்.

நிகழ்வில் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர், கற்கைநெறி தொடர்பில் வாழ்த்துரை வழங்கினார். ADIC நிறுவனத்தின் திட்ட அலுவலர் நிதர்சனா செல்லத்துரை நன்றியுரயாற்றினார்.

சிரேஷ்ட பேராசிரியர் எம்.ஐ.எம். கலீல், பேராசிரியர்களான ஏ.எல்.எம். றியால், ஐ.எல்.எம். மாஹிர், சிரேஷ்ட உதவி பதிவாளர் எம்.ரீ. அஹமத் அஷ்ஹர், திணைக்களங்களின் தலைவர்கள், சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட விரிவுரையாளர்கள் கல்விசாரா உத்தியோகத்தர்கள் மற்றும் சான்றிதழ்களை பெற்றோர் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.




































இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :