சோழன் உலக சாதனை புத்தக நிறுவனம் மற்றும் கிண்ணியா மத்திய கல்லூரி இணைந்து நடாத்திய சோழன் உலக சாதனை படைக்கும் நிகழ்வு கிண்ணியா மத்திய கல்லூரி அப்துல் மஜீது மண்டபத்தில் (29) சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் தலைவர் கதிரவன் த.இன்பராசா தலைமையில் நடை பெற்றது..
சோழன் உலக சாதனை படைக்கும் நிகழ்வில் கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை, கிண்ணியா குறிஞ்சாக்கேணியைச் சேர்ந்த 4 வயதையுடைய சிறுவன் நஸ்மி முகமட் அக்லான் பிலால் சோழன் உலக சாதனையாளனாக தன்னை அடையாளப்படுத்தியுள்ளார்.
இச் சிறுவன் கணித அடுக்குகளின் கணித விதி முறையில் மூலம் பத்தின் அடுக்குகளை அவற்றின் நூறாம் அடுக்குகள் வரையும்,மிகப் பெரிய எண்களை இலகுவாக ஆங்கில மொழியில் கூறியும் சோழன் உலக சாதனையை நிலைநாட்டியுள்ளார்.
இச்சாதனை செய்தமைக்காக மேற்படி குறித்த நிறுவனத்தினால் சான்றிதழ்,கேடயம் மற்றும் அடையாள அட்டை வழங்கி குறித்த சிறுவன் கௌரவிக்கப் பட்டுள்ளார்.
இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட தலைவர் திரு.எம்.தனராஜ்,
மட்டு மாவட்ட பொதுச் செயலாளர் திரு.சிவ வரதகரன்,செயற்குழு உறுப்பினர் எம்.எச்.எம்.பர்சான்,திருகோணமலை மாவட்ட பொதுச் செயலாளர் திரு சுந்தர் விக்னேஸ்வர ராஜா, ஆகியோர் சோழன் உலக சாதனை புத்தகத்தின் சிறப்பு நடுவர்களாகவும் கலந்து கொண்டனர்.
கிண்ணியா வலயக் கல்விப்பணிப்பாளர் திருமதி இஸட்.எம். .முனவ்வரா நளீம் கிண்ணியா மத்திய கல்லூரி அதிபர்எம்.எச்.எம்.நஜாத்,தாய் சேய் நல வைத்தியதிகாரி ஏ.எச்.எம்.சமீம்,குறிஞ்சாக்கேணி சுகாதார வைத்தியதிகாரி ஏ.எம்.எம்.அஜீத் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இவரின் பெற்றோர் கந்தளாய் வைத்தியசாலையில் பணிபுரியும் இயன் மருத்துவர் நஸார் முஹமட் நஸ்மி மற்றும் கிண்ணியா வைத்தியசாலையில் கடமையாற்றும் இயன் மருத்துவர் அஸ்ரப் பாத்திமா பஸீஹா தம்பதியரின் சிரேஷ்ட புதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment