பாலஸ்தீன நெருக்கடி தொடர்பில் தற்போதைய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கம் எவ்வித அறிக்கையும் வெளியிடாதது வருத்தமளிக்கிறது



மாளிகைக்காடு செய்தியாளர்-
காசாவில் உள்ள பாலஸ்தீன மக்களுக்கு எதிராக 2023 அக்டோபர் 7, இஸ்ரேல் ஆரம்பித்த இனப்படுகொலையை உடனடியாக நிறுத்த ஐக்கிய நாடுகள் அமைப்பின் தலையீடு கோரி முஸ்லிம் முற்போக்கு சக்தி கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்திற்கு முன்பாக சுதந்திர பாலஸ்தீனத்திற்காக போராட்டம் ஒன்றை நடத்தியது.

அதில் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் ஸ்தாபகரும் கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினருமான கலீலுர் ரஹ்மான் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார். அதன்போது பாலஸ்தீன நெருக்கடி தொடர்பில் தற்போதைய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கம் எவ்வித அறிக்கையும் வெளியிடாதது வருத்தமளிக்கும் அதேவேளை, பாலஸ்தீன நெருக்கடி தொடர்பில் அவர்களின் கடந்த கால நிலைப்பாட்டையும் பாராட்டுகிறோம் என்றார்.

மேலும், கடந்த அரசாங்கம் இலங்கைத் தொழிலாளர்களை அவர்களின் உயிரையும் பொருட்படுத்தாமல் டாலர்களுக்காக இஸ்ரேலுக்கு வேலைக்காக அனுப்பிய அவலம். அத்துடன், பலஸ்தீனப் போராளிகளினால் அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால், இந்நாட்டு முஸ்லிம்களுக்கு அழுத்தம் கொடுக்கும் நிலைமைக்கு அவர்களை இழுத்துச் செல்வது புவிசார் அரசியல் சதியாக இருக்கலாம் என சந்தேகிக்கிறோம். இந்த துரதிஷ்டமான நிலையை தவிர்க்க தற்போதைய அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுப்பது புத்திசாலித்தனமானது என்பதை நாம் வலியுறுத்தினோம் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :