காரைதீவு கோட்ட மட்ட சிறுவர் மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியில் மாளிகைக்காடு அல்-ஹுசைன் வித்தியாலயம்
தரம் 3,தரம் 4, தரம் 5 ஆகிய கலப்பு பிரிவில் முதலிடத்தினை பெற்று அதன் பின்னர் இடம்பெற்ற கல்முனை வலையமட்ட சிறுவர் மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியில் தரம் 3,தரம் 4, தரம் 5 ஆகிய பிரிவுகளில் பங்கு பற்றி தரம் 4 முதலாம் இடத்தினையும் தரம் 5 மூன்றாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டன.
இவ் மாணவர்களைப் போட்டிகளுக்காக ஒழுங்கமைத்து பயிற்சிகளை வழங்கிய உடற்கல்வி ஆசிரியர் ஏ.எம்.எம்.ரஜி, விளையாட்டு பயிற்றுப்பாளர் ஏ.என்.எம்.ஜெசாத் மற்றும் மாணவர்களை ஒழுங்கமைத்த ஆசிரியர்களான ஏ.ஹம்சியா,எ.கே.நசீனா, கே.இளங்கோ மற்றும் வெற்றியீட்டிய மாணவர்களுக்கும் பாடசாலை அதிபர் எம்.எம்.நழீம் பாடசாலை சமூகம் சார்பில் வாழ்த்துக்களையும்,பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment