கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் முன்னாள் தலைவரும், சம்மாந்துறை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினருமான சம்மாந்துறையைச் சேர்ந்த சட்டத்தரணி எம்.ஐ.எம்.றனூஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்து கொண்டார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட செயற்குழுவின் செயலாளர் எம்.எம்.ஏ.காதர் மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் கட்சியின் அம்பாறை மாவட்ட வேட்பாளருமான ஐ.எல்.மாஹிர் முன்னிலையில், அவரது சம்மமாந்துறை காரியாலயத்தில் இணைந்து கொண்டார்.
சட்டத்தரணி றனூஸ், ஆரம்பத்தில் முஸ்லிம் காங்கிரஸ் ஊடாக சம்மாந்துறை பிரதேச சபையின் உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டார்.
இறுதியாக அவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப்புடன் மிகவும் நெருக்கமாக இருந்துகொண்டு அவரின் அரசியலில் செயற்பாடுகளை முன்னெடுத்து வந்தார்.
அந்தக் காலப்பகுதியிலேயே கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் தலைவராக றனூஸ் நியமனம் பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment