வைத்தியசாலைகளில் ஏற்படும் குருதிப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நோக்கில் இரத்த தான பணிகளை செய்கின்ற சமூக மட்ட அமைப்புகள் மற்றும் இரத்த வங்கி பொறுப்பு வைத்திய அதிகாரி களுக்கு இடையிலான கலந்துரையாடலொன்று வியாழக்கிழமை கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இடம்பெற்றது.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸதீன் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் பிராந்திய கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எ.சீ.எம்.மாஹிர் தலைமையில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது.
அம்பாறை மாவட்ட பொது வைத்தியசாலையின் இரத்த வங்கி பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் ரசிக்க ஹசன்த, சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கி பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஏ.எம்.பிராஸ், கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் இரத்த வங்கி பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் கே.வித்யா, கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கி பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் ஹெரிசானன்ந் மற்றும் இரத்த தான பணிகளை செய்கின்ற சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment