தேசிய மக்கள் சக்தி, ஐக்கிய மக்கள் சக்தி, புதிய ஜனநாயக முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, இலங்கை தமிழ் அரசுக்கட்சி, ஈழ மக்கள் ஐனநாயக கட்சி தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி மற்றும் இன்னும் பல கட்சிகளும் சுயேட்சைக் குழுக்களும் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர்.
கட்சிகளின் முதன்மை வேட்பாளர்கள், சுயேட்சைக் குழக்களின் தலைவர்கள் வேட்பு மனுக்களை மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியிடம் கையளித்தனர். கடந்த காலங்களில் கூட்டுச் சேர்ந்து போட்டியிட்ட பல கட்சிகள் இம்முறை தனித்துப் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய மக்கள் சக்தி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிகள் இம்முறை தனித்துப்போட்டியிடுவதுடன் தமிழ் கட்சிகளும் தனித்தே போட்டியிடுகின்றன.
இதேவேளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தலைவர் எச்.எம்.எம். ஹரீசுக்கு அக்கட்சி போட்டியிடும் வாய்ப்பை வழங்காமல் தவிர்த்துள்ளனர். இது அக்கட்சிக்கு பெரும் இழப்பாகப் பார்க்கப்படுகின்றது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏ.எல்.எம்.அதாஉல்லா, எஸ்.எம்.எம். முசாரப், தயா கமகே, சிறியானி விஜேவிக்ரம ஆகியோர் புதிய ஜனநாயக முன்னணியின் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.
கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் விபரம்:
புதிய ஜனநாயக முன்னணி (சிலிண்டர்) வேட்பாளர் பட்டியல்.அதாவுல்லா ஆதம் லெப்பை மரைக்கார்,தயா தர்மபால கிலிட்டுவ கமகே, ரதம்பல கமகே ஸ்ரீயானி விஜேவிக்ரம,சபீயுல் முதுனபீன் முஹம்மது முஷாரப்,அஹமட் முஹமட் ஜெமீல், ஆதம் லெப்பை உதுமான் கண்டு, அஹமட் முஹமட் நுஷ்கி அஹமட்,ஜோய் பிரான்ஸிஸ் டயஸ்,முஹம்மது மன்சூர் சப்ராஷ் மன்சூர்,வெள்ளி ஜெயச்சந்திரன்
தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் பட்டியல்:
வசந்த பியதிஸ்ஸ,மஞ்சுள ரத்நாயக்க, பியந்த, கித்சிறி,ரத்வத்தே, அன்டன்,றிசாட் புகாரி, ரமீஸ் மொஹிடீன்,ஆதம்பாவா, எம்.சத்தார்
ஈழ மக்கள் ஐனநாயக கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல்: செல்லையா இராசையா, கில் வெட் பாஸ்கரன், சண்முகம் திருஞானமுர்த்தி, கணபதிப்பிள்ளை பாலசுந்தரம், சுமித்திரா தாமோதரம்பிள்ளை, வயிரமுத்து ரகுராமமூர்த்தி, யோகராஜா நளினி, முனசிங்க அத்துகோறல்லகே சமீர சம்பத், அகமது லெவ்வை அன்சார், நாகேஸ்வரம் டிலக்சன்
தமிழரசு கட்சி திகாமடுல்ல வேட்பாளர்கள் பட்டியல்:
கலையரசன், கோடீஸ்வரன்,ஜெயசிறில், ஜெகசுதன் இந்து நேஸ், ஜனார்த்தனன், நிதான்சன், ஜீவராஜ்,மஞ்சுளா,யசோதரன்
முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்:
பைசல் காசீம், கே.எஸ்.கே.திலக் ரஞ்சித் இ.மொஹம்மட்அமீர், எம்.எஸ்.உதுமாலெப்பை, எம்.எஸ்.ஏ.வாசித், ஏ.எல்.தவம், சிராஸ் மீராசாஹிப், றகுமத், மன்சூர், எம்.ஐ.எம்.மன்சூர், முஸ்மி
0 comments :
Post a Comment